வீட்டுக்கு 2 ஆர்டர்.. மட்ட ரேட்ல Samsung LTE போன்.. 6000mAh பேட்டரி.. HD+ டிஸ்பிளே.. 50MP கேமரா.. எந்த மாடல்?
சாம்சங் கேலக்ஸி எம்8 எல்டிஇ (Samsung Galaxy M08 LTE) மாடலானது, நம்ப முடியாத டிஸ்கவுண்ட் விலையில் அமேசானில் நடந்துவரும் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் 2026 (Amazon Great Indian Festival Sale 2026) என்னும் சிறப்பு விற்பனையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
அமேசான் சிறப்பு விற்பனையில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்8 எல்டிஇ ஸ்மார்ட்போனுக்கு 36 சதவீத டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.15,999 விலைக்கு வாங்கலாம். எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஆர்டர் செய்தால், ரூ.625 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.15,374 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

மேலும், இதே எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஈஎம்ஐ ஆப்ஷனில் ஆர்டர் செய்தால் ரூ.750 தள்ளுபடி கிடைக்கும். ஆகவே, ரூ.15,249 விலைக்கு வாங்கலாம். இதிலேயே 6 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சில்வர் (Silver) கலரில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கிறது. இப்போது, பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
சாம்சங் கேலக்ஸி எம்8 எல்டிஇ அம்சங்கள் (Samsung Galaxy M08 LTE Specifications): 6.7 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) பிஎல்எஸ் எல்சிடி (PLS LCD) டிஸ்பிளேவை கொடுத்து இருக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 16 மில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட மாடலாக இருக்கிறது.
இந்த பட்ஜெட்டில் கிடைத்தாலும், 6 ஜென் ஓஎஸ் அப்டேட்களை கொடுக்கிறது. 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களும் கொடுக்கப்படுகிறது. ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99பிளஸ் (Octa Core MediaTek Helio G99+) சிப்செட் கொண்ட ஸ்மார்ட்போனாக இந்த சாம்சங் கேலக்ஸி எம்8 எல்டிஇ கிடைக்கிறது. இதற்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் இருக்கும்.
50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி செகண்டரி கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கொடுக்கப்பட்டு இருக்கிறது. மெயின் கேமராவில் 10x டிஜிட்டல் ஜூமிங் கிடைக்கிறது. ஓஐஎஸ் கிடைக்காது. எப்எச்டி (FHD) வீடியோ ரெக்கார்டிங் உள்ளது. 8 எம்பி செல்பீ கேமராவை இந்த சாம்சங் கேலக்ஸி எம்8 எல்டிஇ ஸ்மார்ட்போன் கொடுக்கிறது.
64 ஜிபி மெமரி போதாது என்றால், கூடுதலாக 2 டிபி வரையில் மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) பயன்படுத்தி கொள்ளலாம். டூயல் நானோ சிம் சிலாட் கிடைக்கிறது. 4ஜி சிம் கார்டுகளை பயன்படுத்தி கொள்ளலாம். 6000mAh பேட்டரி கொண்ட மாடலாக இந்த சாம்சங் கேலக்ஸி எம்8 எல்டிஇ கிடைக்கிறது. டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) கிடைக்கிறது.
3.5 எம்எம் இயர்போன் ஜாக் (Earphone Jack) உள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி எம்8 எல்டிஇ ஸ்மார்ட்போனின் கனெக்டிவிட்டிகளை பார்க்கையில், வை-பை 802.11 ஏ (Wi-Fi 802.11a) ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) கிடைக்கிறது. மேலும், ஜிபிஎஸ் (GPS), குளோனாஸ் (Glonass), பெய்டியூ (Beidou), கலிலியோ (Galileo) மற்றும் கியூஇசட்எஸ்எஸ் (QZSS) கொடுக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications
