வீட்டுக்கு 1 ஆர்டர்.. வெறும் ரூ.11,000 பட்ஜெட்ல 5000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 25W சார்ஜிங்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் டாப் டிஸ்கவுண்ட் சேலில் சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் நம்ப முடியாத தள்ளுபடி விலைக்கு கிடைக்கின்றன. இதில் 5000mAh பேட்டரி, 50 எம்பிக கேமரா, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் பீச்சர்களை சாம்சங் கேலக்ஸி எம்07 (Samsung Galaxy M07) மாடலும் தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. இந்த சாம்சங் ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை பார்க்கலாம்.
இப்போது, பிளிப்கார்ட் டிஸ்கவுண்ட் சேலில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட மாடலுக்கு 21 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.11,793 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.675 தள்ளுபடியும் கிடைக்கிறது. ஆகவே, ரூ.11,168 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

6 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையையும் இந்த சாம்சங் கேலக்ஸி எம்07 ஸ்மார்ட்போன் கொடுத்து இருக்கிறது. பிளாக் (Black) கலரில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் 50 எம்பி கேமரா மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுத்து இருக்கிறது. இதனாலேயே விற்பனையில் பட்டையை கிளப்பி வருகிறது.
சாம்சங் கேலக்ஸி எம்07 அம்சங்கள் (Samsung Galaxy M07 Specifications): பட்ஜெட் விலையில் கிடைத்தாலும், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மட்டுமல்லாமல், 6 வருடங்களுக்கான ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்கிரேட்களை (Android OS Upgrades) இந்த சாம்சங் கேலக்ஸி எம்07 ஸ்மார்ட்போன் கொடுத்து இருக்கிறது. 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களும் (Security Updates) வருகிறது.
சாம்சங் நிறுவனத்தின் ஒன் யுஐ 7.0 (One UI 7.0) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 எஸ்ஓசி (Octa Core MediaTek Helio G99 SoC) சிப்செட்டை இந்த சாம்சங் கேலக்ஸி எம்07 ஸ்மார்ட்போன் கொடுத்து இருக்கிறது. மேலும், ஆர்ம் மாலி ஜி7 எம்சி2 (Arm Mali G57 MC2) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு இருக்கிறது. 1 டிபிக்கு மைக்ரோஎஸ்டி கார்டு பயன்படுத்தலாம்.
எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.7 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எம்07 ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் வாட்டர் டிராப் நாட்ச் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் நினைத்து பார்க்க முடியாத கேமரா சிஸ்டம் பேக் செய்யப்பட்டு இருக்கிறது.
50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. இந்த பட்ஜெட்டில் மற்ற நிறுனங்களில் 32 எம்பி மெயின் கேமரா கிடைக்கும். ஆனால், இதில் 50 எம்பி கேமரா கிடைக்கிறது. இந்த மெயின் கேமராவில் ஃபுல்எச்டி (FHD) வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். ஆட்டோ போகஸ் சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 8 எம்பி ப்ரன்ட் கேமரா கிடைக்கிறது. ஹைப்பர்லேப்ஸ் (Hyperlapse), நைட் (Night) மற்றும் போர்ட்ராய்டு (Portrait) பீச்சர்கள் உள்ளன. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரியை இந்த சாம்சங் கேலக்ஸி எம்07 ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. 7.6 எம்எம் தடிமன் கொண்ட மாடலாக விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications
