Amazon அலற சேல்.. ரூ.6,499-க்கு SAMSUNG போன்.. 5000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 25W சார்ஜிங்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2025 (Great Indian Festival Sale 2025) என்னும் சிறப்பு விற்பனை நடக்கிறது. இந்த விற்பனையில் சாம்சங் ஸ்மார்ட்போன்கள் நம்ப முடியாத பட்ஜெட் விலையில் கிடைக்கின்றன. இதில் லேட்டஸ்ட் சாம்சங் கேலக்ஸி எம்07 (Samsung Galaxy M07) ஸ்மார்ட்போனுக்கும் தள்ளுபடி கிடைக்கிறது. மார்கெட்டில் களமிறங்குவதற்கு முன்பாகவே நேரடியாக அமேசான் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி எம்07 ஸ்மார்ட்போனின் விலை, விற்பனை மற்றும் முழு பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.6,999ஆக இருக்கிறது. இது அடிமட்ட விலையாக இருப்பதால், சாம்சங் பிரியர்கள் மட்டுமல்லாமல், பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை எதிர்பார்க்கும் கஸ்டமர்களும் அடிச்சு பிடித்து ஆர்டர் செய்து வருகின்றனர். அமேசான் தளத்தில் ரூ.500 பேங்க் டிஸ்கவுண்ட் போக ஆர்டர் செய்து கொள்ளலாம்.

இந்த டிஸ்கவுண்ட் எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.6,499 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இதுபோக ரூ.6,600 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கிடைக்கிறது. பட்ஜெட் மாடலாக இருந்தும், டிசைனில் பிரீமியம் லுக் கொடுக்கிறது. பிளாக் (Black) கலரில் விற்பனைக்கு கிடைக்கிறது. டிஸ்பிளே, பேட்டரி, சிப்செட் பீச்சர்களை இப்போது பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி எம்07 அம்சங்கள் (Samsung Galaxy M07 Specifications): இந்த சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. இதுபோக 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் பக்கா சிப்செட் கிடைக்கிறது.
ஆகவே, ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 எஸ்ஓசி (Octa Core MediaTek Helio G99 SoC) கிடைக்கிறது. இந்த சிப்செட்டுடன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. அதேபோல சாம்சங் நிறுவனத்தில் ஒன் யுஐ 7.0 (One UI 7.0) கிடைக்கிறது. இந்த அடிமட்ட பட்ஜெட்டில் 6 வருடங்களுக்கான ஆண்டார்ய்டு ஓஎஸ் அப்கிரேட்களை (Android OS Upgrades) கொடுக்கிறது.
அதேபோல 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களையும் (Security Updates) கொடுத்து, மற்ற பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை தூக்கி சாப்பிட்டு இருக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எம்07 ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது.
இந்த செல்பீ வாட்டர்-டிராப் நாட்ச் கொடுக்கிறது. ரியர் கேமராவில் ஃபுல்எச்டி (FHD - 1920 x 1080 பிக்சல்கள்) வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஆட்டோ போகஸ் (Auto Focus) கிடைக்கிறது. ஹைப்பர்லேப்ஸ் (Hyperlapse), நைட் (Night), போர்ட்ராய்டு (Portrait), ப்ரோ (Pro) மற்றும் ஸ்லோவ் மோஷன் (Slow Motion) போன்ற பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியாத கேமரா பீச்சர்கள் கிடைக்கின்றன.
இந்த சாம்சங் கேலக்ஸி எம்07 ஸ்மார்ட்போனில் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் ஸ்லிம் லுக்கில் 7.6 எம்எம் தடிமன் மட்டுமே வருகிறது. சி-டைப் (C-Type) சார்ஜிங் மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கிடைக்கிறது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications