வீட்டுக்கு 2 ஆர்டர்.. ரூ.6,459 பட்ஜெட்ல SAMSUNG.. 5000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 25W சார்ஜிங்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எம்07 (Samsung Galaxy M07) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. ரூ.7,000 பட்ஜெட்டைவிட கம்மியான விலைக்கு 5000mAh பேட்டரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா, IP54 ரேட்டிங் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் போன்ற பீச்சர்கள் மட்டும்மல்லாமல், 6 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் கிடைக்கிறது. ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 6என்எம் சிப்செட் கொண்ட இந்த சாம்சங் கேலக்ஸி எம்07 ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.7,699ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.6,799 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த விலையிலும் ரூ.340 பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.6,459 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். ரூ.5,500 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. ஈஎம்ஐ ஆப்ஷனிலும் தள்ளுபடி இருக்கிறது.

இந்த சாம்சங் கேலக்ஸி எம்07 ஸ்மார்ட்போனில் பிரீமியம் லுக் கொடுக்கும்படி பிளாக் (Black) கலர் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த அடிமட்ட பட்ஜெட்டில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மட்டுமல்லாமல், 6 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்களை கொடுத்து இருக்கிறது. மேலும், 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை கொடுக்கிறது. முழு பீச்சர்களை பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி எம்07 அம்சங்கள் (Samsung Galaxy M07 Specifications): இதுவொரு 4ஜி மாடலாக இருப்பதால், ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 6என்எம் (Octa Core MediaTek Helio G99 6nm) சிப்செட் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் ஒன் யுஐ 7 (One UI 7) கிடைக்கிறது. ஆகவே, இந்த பட்ஜெட்டுக்கு சிப்செட் பர்ஃபாமென்ஸ் கிடைக்கும். ஆர்ம் மாலி ஜி57 ஜிபியு (Arm Mali G57 GPU) உள்ளது.
இந்த பட்ஜெட்டிலும் ஆட்டோ போகஸ் (Auto Focus) சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமராவை கொடுக்கிறது. இதுபோக 2 எம்பி டெப்த் கேமரா கிடைக்கிறது. வாட்டர்-டிராப் நாட்ச் (Water Drop Notch) டிசைனில் 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. ஃபுல்எச்டி (FHD) வீடியோ ரெக்கார்டிங், நைட் மோட் (Night Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) போன்ற பீச்சர்கள் உள்ளன.
90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.7 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவுக்கு எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மட்டுமல்லாமல், 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. 64 ஜிபி மெமரி மட்டுமல்லாமல், 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) பயன்படுத்த சிலாட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஆகவே, டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) உடன் எஸ்டி கார்டு சிலாட் வருகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எம்07 ஸ்மார்ட்போனில் IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) மற்றும் டைப்-சி சார்ஜிங் (Type - C Charging) கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது.
இந்த பேட்டரியுடன் 7.6 எம்எம் தடிமன் மட்டுமே வருகிறது. அதேபோல 184 கிராம் எடை மட்டுமே உள்ளது. ஆகவே, ஸ்லிம் டிசைனில் எதிர்பார்க்கலாம. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கிடைக்கிறது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor), பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported Speaker) உள்ளது.


Click it and Unblock the Notifications








