வெறும் ரூ.6999க்கு 6 OS அப்டேட்.. 50எம்பி கேமரா.. 25W சார்ஜிங்.. Samsung போன் அறிமுகம்.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் தனது புதிய சாம்சங் கேலக்ஸி எம்07 (Samsung Galaxy M07) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 6 ஓஎஸ் அப்டேட், 50எம்பி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த சாம்சங் போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி எம்07 அம்சங்கள் (Samsung Galaxy M07 Specifications): 6.7-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி எம்07 ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளே 720 x 1600 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது.

சக்திவாய்ந்த ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 6என்எம் பிராஸசர் உடன் இந்த சாம்சங் போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த புதிய போனில் உள்ளது.
One UI 7 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் இந்த புதிய சாம்சங் போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு 6 ஓஎஸ் அப்டேட் மற்றும் 6 வருடங்களுக்குப் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று சாம்சங் நிறுவனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் சாம்சங் கேலக்ஸி எம்07 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker), 3.5 மிமீ ஆடியோ ஜாக், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor), IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த சாம்சங் போனில் உள்ளன.

5000mAh பேட்டரி வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எம்07 போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அதேபோல் டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
சாம்சங் கேலக்ஸி எம்07 ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,999-ஆக உள்ளது. அமேசான் தளத்தில் இந்த போன் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் இந்த போன் கருப்பு நிறத்தில் வாங்க கிடைக்கிறது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் கம்மி பட்ஜெட்டில் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும்.


Click it and Unblock the Notifications








