Home
Mobile

அசூர விற்பனை.. மட்ட ரேட்ல 5000mAh பேட்டரி Samsung போன்.. 25W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் மட்ட ரேட்டில் கிடைத்தால், விற்பனையானது பட்டையை கிளப்பாமலா இருக்கும்.. என்று சொல்லும்படி சாம்சங் கேலக்ஸி எம்07 (Samsung Galaxy M07) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. மீடியாடெக் ஹீலியோ ஜி99 பவருடன் கிடைப்பதால், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பட்ஜெட்டில் கிடைக்கும் எம் சீரிஸ் மாடல்களுக்கு தனி வரவேற்பு இருக்கிறது. இதில் களமிறங்கிய சாம்சங் கேலக்ஸி எம்07 ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 15 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.10,178 விலைக்கு வாங்க கிடைக்கிறது. மேலும், ரூ.102 கிரெடிட் கார்டு தள்ளுபடி கிடைக்கிறது.

அசூர விற்பனை.. மட்ட ரேட்ல 5000mAh பேட்டரி Samsung போன்.. 25W சார்ஜிங்!

இதை பெற்றால், ரூ.10,076 விலைக்கு இந்த சாம்சங் கேலக்ஸி எம்07 ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். மேலும், ஈஎம்ஐ சலுகை, எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் கிடைக்கின்றன. பிளாக் (Black) கலரில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கிறது. 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொண்ட மாடலாக இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எம்07 அம்சங்கள் (Samsung Galaxy M07 Specifications): ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 எஸ்ஓசி (Octa Core MediaTek Helio G99) சிப்செட்டை இந்த சாம்சங் கேலக்ஸி எம்07 ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. ஒன் யுஐ 7.0 (One UI 7.0) கொடுக்கப்பட்டு உள்ளது.

மற்ற நிறுவனங்கள் இந்த பட்ஜெட்ட்டில் கொடுக்க முடியாதபடி 6 வருடங்களுக்கான ஆண்டார்ய்டு ஓஎஸ் அப்டேட்களை கொடுத்து இருக்கிறது. மேலும், 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களையும் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். 6.7 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை பேக் செய்துள்ளது.

இந்த டிஸ்பிளேவுக்கு எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 16 மில்லியன் கலர் டெப்த் கொண்ட டிஸ்பிளேவாக இது இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொடுத்துள்ளது.

இதில் ஃபுல்எச்டி வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். மேலும், ஆட்டோ போகஸ் (Auto Focus) சப்போர்ட் கொடுத்து இருக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் ஹைப்பர்லேப்ஸ் (Hyperlapse), நைட் (Night) மற்றும் போர்ட்ராய்டு (Portrait) போன்ற கேமரா பீச்சர்களை பேக் செய்துள்ளது. மேலும், ப்ரோ (Pro) மற்றும் ஸ்லோவ் மோஷன் (Slow Motion) கிடைக்கிறது.

வாட்டர்-= டிராப் நாட்ச் (Water drop notch) கிடைக்கிறது. இதில் செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 8 எம்பி செல்பீ கேமராவை இந்த சாம்சங் கேலக்ஸி எம்07 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எம்07 ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 7.6 எம்எம் தடிமன் உள்ளது.

ஆகவே, ஓரளவுக்கு ஸ்லிம் டிசைனில் கிடைக்கும். 184 கிராம் எடை கொடுத்துள்ளது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் டைப்-சி போர்ட் (Type-C Port) கிடைக்கிறது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) இந்த சாம்சங் கேலக்ஸி எம்07 ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது. டூயல் 4ஜி எல்டிஇ, ப்ளூடூத், வை-பை, ஜிபிஎஎஸ் உள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M07 Available At 15 Percent Discount in Flipkart Check Wow Deal
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X