மலிவு விலை.. 5000mAh பேட்டரி.. 50MP கேமரா.. இந்தியாவுக்கு வரும் புது Samsung போன்.. எந்த மாடல்?
சாம்சங் (Samsung) நிறுவனம் இந்தியாவில் தனது புதிய சாம்சங் கேலக்ஸி எம்07 4ஜி (Samsung Galaxy M07 4G) ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் முக்கிய விவரக்கறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி எம்7 4ஜி அம்சங்கள் (Samsung Galaxy M07 4G Specifications): 6.7-இன்ச் எல்சிடி டிஸ்பிளேவுடன் சாம்சங் கேலக்ஸி எம்07 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 720x1,600 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

சக்திவாய்ந்த மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட்(MediaTek Helio G99 chipset) சிப்செட் உடன் சாம்சங் கேலக்ஸி எம்7 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் சாம்சங் கேலக்ஸி எம்7 4ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் சாம்சங் கேலக்ஸி எம்7 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும்.மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி எம்7 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதியும் இந்த சாம்சங் போனில் உள்ளது.
5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எம்7 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன.
4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாம்சங் கேலக்ஸி எம்7 4ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் ரூ.8,000 பட்ஜெட்டில் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எம்7 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த போன் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








