பொளக்குது விற்பனை.. வெறும் ரூ.9,499-க்கு SAMSUNG.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 25W சார்ஜிங்.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனத்தில் ரூ.10000 பட்ஜெட்டில் கிடைத்தால் அந்த போனின் விற்பனை எப்படி இருக்கும் என்பதை சொல்லி தெரிய வேண்டியது கிடையாது. அதிலும் 50 எம்பி மெயின் கேமரா, 5000mAh பேட்டரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கிடைத்தால் சொல்லவா வேண்டும். சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி (Samsung Galaxy M06 5G) போனின் விற்பனை இந்திய மார்கெட்டில் தொடங்கி இருக்கிறது. அமேசானில் அறிமுக சலுகையுடன் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த சாம்சங்கின் விலை, பீச்சர்கள் இதோ.
சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M06 5G Specifications): இந்த சாம்சங் போனில் மிட்-ரேஞ்ச் மாடல்களுக்கு நிகராக ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மட்டுமல்லாமல், அதற்கு 4 ஜெனரேஷன் ஓஎஸ் அப்கிரேட்களும், 4 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களும் கிடைக்கிறது. சாம்சங்கின் ஒன் யுஐ 7 (One UI 7) மற்றும் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) வருகிறது.

இந்த அடிமட்ட பட்ஜெட்டில் கஸ்டமர்களுக்கு லாக்-ப்ரீ அவுட்புட் கொடுக்கும்படி 6என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (6nm Octa Core MediaTek Dimensity 6300) சிப்செட் கிடைக்கிறது. பட்ஜெட் மாடலாக இருப்பதால், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கிடைக்கிறது. இவற்றில் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி சப்போர்ட் உள்ளது.
இந்த சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி போனில் 6.7 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மட்டுமல்லாமல் 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. பட்ஜெட் மாடலாக இருந்தாலும், டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் சாம்சங் மாடல்களில் கிடைக்கும். ஆனால், இந்த போனில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது.
இருப்பினும், டிசைனில் பிரீமியம் லுக் கொடுக்கிறது. ஆகவே, இந்த சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி போனில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா மட்டுமே கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ ஷூட்டரை கொடுக்கிறது. பேட்டரியில் எந்தவித மாறுபாடும் இல்லை. வழக்கமாக பட்ஜெட் மாடல்களில் வருவதை போலவே 5000mAh பேட்டரி மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது.
இந்த சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் எதிர்பார்க்க முடியாது. ஆகவே, பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) போன்ற பட்ஜெட் பீச்சர்களே கிடைக்கிறது. அதேபோல இன்-டிஸ்பிளே சென்சார் இல்லை, சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) உள்ளது.
பிளேசிங் பிளாக் (Blazing Black) மற்றும் சேஜ் கிரீன் (Sage Green) கலர்களில் கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.9,999ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.11,499ஆகவும் இருக்கிறது. ரூ.500 பேங்க்ட டிஸ்கவுண்ட் போக வெறும் ரூ.9,499 பட்ஜெட்டில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








