Home
Mobile

வீட்டுக்கு 2 ஆர்டர்.. மட்ட ரேட்ல சாம்சங் 5G போன்.. ரூ.9000 கூட இல்ல 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி போக அடிமட்ட விலைக்கு கிடைக்கும் சாம்சங் ஸ்மார்ட்போனின் விற்பனை பட்டையை கிளப்பி வருகிறது. ரூ.9,000 பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு 50 எம்பி கேமரா, 5000mAh பேட்டரி மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கிறது. இந்த சாம்சங் ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி (Samsung Galaxy M06 5G) ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ.9,499 பட்ஜெட்டில் களமிறங்கியது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.9,341 விலைக்கு கிடைக்கிறது. இதுபோக ரூ.468 உடனடி தள்ளுபடியுடன் ரூ.8,873 விலைக்கு வாங்க கிடைக்கிறது. இந்த அடிமட்ட விலைக்கு பிராண்ட்டில் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க முடிகிறது.

வீட்டுக்கு 2 ஆர்டர்.. மட்ட ரேட்ல சாம்சங் 5G போன்.. ரூ.9000 கூட இல்ல!

சேஜ் கிரீன் (Sage Green) மற்றும் பிளேசிங் பிளாக் (Blazing Black) கலர்களில் இந்த சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி பிரீமியம் லுக் கொடுக்கிறது. இந்த விலைக்கு கிடைத்தாலும் கூட 4 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கிறது. மேலும், சாம்சங் கிநாக்ஸ் வால்ட் (Samsung Knox Vault) கொடுக்கப்பட்டு இருக்கிறது. டிஸ்பிளே, கேமரா, பேட்டரியை பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M06 5G Specifications): இந்த சாம்சங் ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே மற்றும் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. மேலும், 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 16 மில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது.

ஒன் யுஐ 7 (One UI 7) கொடுக்கப்படுகிறது. இந்த பட்ஜெட்டை விட கூடுதல் 5ஜி பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் கிடைக்கிறது. இருப்பினும், ஆர்ம் மாலி ஜி57 எம்2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு மட்டுமே வருகிறது. 128 ஜிபி மெமரிக்கு மேல் 1 டிபிக்கு மைக்ரோஎஸ்டி (microSD) கிடைக்கிறது.

ஆகவே, இதற்கான சிலாட் மற்றும் டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) வருகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கிடைக்கிறது. மேலும், 8 எம்பி செல்பீ கேமராவை கொடுக்கிறது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கிறது.

இந்த பேட்டரி இருப்பதால், 8 எம்எம் தடிமன் கிடைக்கிறது. 191 கிராம் எடை கொடுக்கிறது. பட்ஜெட் சாம்சங் மாடல்களில் கிடைக்கும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி போனில் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom ported Speaker) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

12 5ஜி பேண்ட்களுடன் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA) கிடைக்கிறது. வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), ஜிபிஎஸ் (GPS), குளோனாஸ் (GLONASS) கிடைக்கிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் மட்டுமல்லாமல், யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C Port) கிடைக்கிறது. ரூ.9,000 பட்ஜெட்டுக்குள் அதிக 5ஜி பேண்ட்கள் மற்றும் பக்காவான சிப்செட் வேண்டுமானால், இதை வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M06 5G With 4GB RAM Available Under Rs 9000 in Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X