பட்டிதொட்டியெல்லாம் பறக்கும் ஆர்டர்.. ரூ.7,999 பட்ஜெட்ல 50எம்பி கேமரா.. 25W சார்ஜிங்.. 5ஜி.. எந்த மாடல்?
இந்தியாவில் விவோ, மோட்டோ, ஒப்போ போன்களை விட சாம்சங் நிறுவனத்தின் போன்களுக்கு தான் அதிக வரவேற்பு உள்ளது. அதாவது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் வெளிவருகின்றன. எனவே தான் சாம்சங் போன்கள் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி (Samsung Galaxy M06 5G) ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் தளத்தில் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.
அதாவது அமேசான் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 36 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.7,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M06 5G specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட் உடன் சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி போன் வெளிவந்துள்ளது. இந்த சிப்செட ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
அதேபோல் 6.7-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி-யு நாட்ச் (Infinity-U notch) டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.
குறிப்பாக One UI 7.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு 4 மேஜர் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் கிடைக்கும். பின்பு 4 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது . மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த சாம்சங் போன். எனவே இந்த போனின் உதவியுடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.
அதுவும் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை 802.11ஏசி, புளூடூத் 5.3, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல அம்சங்கள் ஆதரவுடன் இந்த சாம்சங் போன் வெளிவந்துள்ளது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) ஆதரவு இந்த சாம்சங் போனில் உள்ளது. பின்பு சாம்சங் நாக்ஸ் வால்ட் அம்சம் (Samsung Knox Vault feature) ஆதரவும் இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
5000mAh பேட்டரி ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.


Click it and Unblock the Notifications