Home
Mobile

ஆபரில் Samsung 5ஜி போன்.. 4 OS அப்டேட்.. 50எம்பி கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனம் இந்த 2026-ம் ஆண்டு பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்த ஒவ்வொரு போன்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில் சாம்சங் நிறுவனத்தின் பிரபலமான சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்று தற்போது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி ((Samsung Galaxy M06 5G) ஸ்மார்ட்போன் மாடலுக்கு 16 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.9,995 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

ஆபரில் Samsung 5ஜி போன்.. 4 OS அப்டேட்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M06 5G specifications): 6.7-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி-யு நாட்ச் (Infinity-U notch) டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்,90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இதன் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

One UI 7.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு 4 மேஜர் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் கிடைக்கும். பின்பு 4 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட் உடன் சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி போன் வெளிவந்துள்ளது. இந்த சிப்செட ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த சாம்சங் போன். எனவே இந்த போனின் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

அதேபோல் 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை 802.11ஏசி, புளூடூத் 5.3, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல அம்சங்கள் ஆதரவுடன் இந்த சாம்சங் போன் வெளிவந்துள்ளது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) ஆதரவு இந்த சாம்சங் போனில் உள்ளது. பின்பு சாம்சங் நாக்ஸ் வால்ட் அம்சம் (Samsung Knox Vault feature) ஆதரவும் இந்த போனில் உள்ளது.

5000mAh பேட்டரி ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M06 5G with 128GB storage gets price cut on Flipkart: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X