Home
Mobile

தூக்குங்கடா அந்த தங்கத்த.. ரூ.8,999 பட்ஜெட்ல Samsung 5G போன்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

அமேசான் குடியரசு தின விற்பனை 2026 (Amazon Republic Day Sale 2026) என்கிற சிறப்பு விற்பனையில் சாம்சங் நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. இதில் சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி (Samsung Galaxy M06 5G) ஸ்மார்ட்போனுக்கு 28 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைத்த தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இப்போது, அமேசான் தளத்தில் 28 சதவீத தள்ளுபடி போக 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.8,999 விலைக்கு கிடைக்கிறது. மேலும், அமேசான் ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.269 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, மேலும் மலிவான விலைக்கு சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

தூக்குங்கடா அந்த தங்கத்த.. ரூ.8,999 பட்ஜெட்ல Samsung 5G போன்.. மாடல்?

மிட்-ரேஞ்ச் விலைக்கு கிடைக்கும் சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு கொடுக்கப்படும் ஆண்ட்ராய்டு அப்டேட் பாலிசி இந்த சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி ஸ்மார்ட்போனுக்கும் கிடைக்கிறது. ஆகவே, 4 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை கொடுத்துள்ளது. சாம்சங் கிநாக்ஸ் வால்ட் (Samsung Knox Vault) செக்யூரிட்டி கிடைத்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M06 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட்டை இந்த சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. மேலும், ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது.

சாம்சங் நிறுவனத்தின் ஒன் யுஐ 7 (One UI 7) கொடுக்கப்பட்டு உள்ளது.4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் போக 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் கிடைக்கிறது. இந்த 128 ஜிபிக்கு மேல் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு பயன்படுத்தலாம். ஆகவே, டூயல் நானோ சிம் சிலாட் மற்றும் மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் கிடைக்கிறது.

6.7 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைத்துள்ளது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கொடுக்கப்பட்டு உள்ளது.

வீடியோ கால்கள் மற்றும் செல்பீகளுக்காக 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரியை இந்த சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மேலும், சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மற்றும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported Speaker) உள்ளது.

3.5 எம்எம் ஆடியோ ஜாக், டைப்-சி சார்ஜிங் போர்ட் உள்ளது. 8 எம்எம் தடிமன், 191 கிராம் எடை உள்ளது. 5ஜி எஸ்ஏ, என்எஸ்ஏ மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ கிடைக்கிறது. ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), வை-பை 802 (Wi-Fi 802) கிடைக்கிறது. சேஜ் கிரீன் மற்றும் பிளேசிங் பிளாக் ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M06 5G 5000mAh Battery 28 Percent Discount in Amazon Republic Day Sale 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X