வீட்டுக்கு 2 ஆர்டர்.. ரூ.6,249-க்கு SAMSUNG போன்.. 5000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 25W சார்ஜிங்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எம்05 (Samsung Galaxy M05) போனுக்கு விலை குறைப்பு கிடைக்கிறது. கிடைக்காத பட்ஜெட்டில் 5000mAh பேட்டரி, 50 எம்பி கேமரா, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், 2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்டை கொடுக்கிறது. மீடியாடெக் ஹீலியோ ஜி85சிப்செட் கொடுக்கும் இந்த சாம்சங் கேலக்ஸி எம்05 போனின் பீச்சர்கள் எப்படி? விலை மற்றும் தள்ளுபடி எவ்வளவு? உள்ளிட்ட விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ரியல்மி, ரெட்மி, ஐடெல், போகோ போன்ற நிறுவனங்களுக்கு கொஞ்சமும் குறையில்லாதபடி அடிமட்ட பட்ஜெட்டிலான ஸ்மார்ட்போன்களை சாம்சங் நிறுவனமும் களமிறக்கி வருகிறது. ஆனால், அந்த நிறுவனங்களில் கிடைக்காத ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் சாம்சங் நிறுவனத்தில் கிடைப்பதால், அதற்கான வரவேற்பு அதிகமாக இருக்கிறது.

இப்படி அடிமட்ட பட்ஜெட்டில் 2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மற்றும் 4 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களுடன் சாம்சங் கேலக்ஸி எம்05 மாடல் இந்திய மார்கெட்டில் வெளியாகியது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.7,999ஆக இருந்தது. ஆனால், இப்போது அமேசான் தளத்தில் ரூ.6,249 பட்ஜெட்டில் வாங்க கிடைக்கிறது.
ஆகவே, எந்தவொரு டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டும் இல்லாமலேயே ரூ.1,750 விலை குறைப்பு போக ஆர்டர் செய்து கொள்ளலாம். மேலும், குறிப்பிட்ட கார்டுகளுக்கு பேங்க் தள்ளுபடியும் கொடுக்கப்படுகிறது. அதேபோல ரூ.5,900 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் பெற்று கொள்ளலாம். மின்ட் கிரீன் (Mint Green) கலரில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எம்05 அம்சங்கள் (Samsung Galaxy M05 Specifications): இந்த கேலக்ஸி மாடலில் 6.7 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) பிஎல்எஸ் எல்சிடி (PLS LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 16 மில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. ஆகவே, பட்ஜெட்டுக்கு ஏற்ப டிஸ்பிளே அவுட்புட் கிடைக்கும்.
இதுவொரு 4ஜி மாடலாக கிடைப்பதால், அதற்கு ஏற்ப ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 12என்எம் (Octa Core MediaTek Helio G85 12nm) சிப்செட் மற்றும் மாலி ஜி52 ஜிபியு (Mali G52 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. 64 ஜிபி ஸ்டோரேஜ் + 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) சப்போர்ட் கிடைக்கிறது. 2 ஜெனரேஷன் அப்டேட் + ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது.
பட்ஜெட் விலை சாம்சங் போன்களில் கிடைக்கும் ஒன்யுஐ கோர் 6.0 (OneUI Core 6.0) வருகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எம்05 போனில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி செகண்டரி கேமரா மற்றும் 10X ஜூமிங் கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ கேமரா மற்றும் ஃபுல்எச்டி வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கப்படுகிறது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging), டைப்-சி போர்ட் கிடைக்கிறது.
5000mAh பேட்டரி கேபாசிட்டி கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.8 எம்எம் தடிமன் மற்றும் 195 எடை கொடுக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் லைட் சென்சார் (Light Sensor), பிராக்சிமிடி சென்சார் (Proximity Sensor) மற்றும் ஆக்சிலரோமீட்டர் (Accelerometer) கிடைக்கிறது. டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), வை-பை 802 (Wi-Fi 802) கனெக்டிவிட்டி உள்ளது.


Click it and Unblock the Notifications








