ஏங்ங்ங்க விட்ராதீங்க.. வெறும் ரூ.6,199-க்கு SAMSUNG போனுங்க.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எம்05 (Samsung Galaxy M05) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலைக்கு ஆர்டர் செய்ய கிடைக்கிறது. யாரும் கொடுக்க முடியாத கம்மி விலைக்கு 5000mAh பேட்டரி, 50 எம்பி கேமரா எச்டிபிளஸ் டிஸ்பிளே மற்றும் 25W சார்ஜிங் கொடுக்கிறது. இந்த சாம்சங் ஸ்மார்ட்போனின் பீச்சர்கள், விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இப்போது, அமேசானில் 38 சதவீத டிஸ்கவுண்ட் போக 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட கொண்ட ரூ.6,249 விலைக்கு கிடைக்கிறது. இந்த விலையில் குறிப்பிட்ட பேங்க் கார்டுகளுக்கு உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. அமேசான் பே லேட்டர் மூலம் ரூ.50 கேஷ் பேக் பெற்று கொள்ளலாம். ஆகவே, ரூ.6,199 விலைக்கு இந்த சாம்சங் கேலக்ஸி எம்05 ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்05 அம்சங்கள் (Samsung Galaxy M05 Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 12என்எம் (Octa Core MediaTek Helio G85 12nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது. மேலும், மாலி ஜி52 ஜிபியு (Mali G52 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஒன்யுஐ கோர் 6.0 (OneUI Core 6.0) கிடைக்கிறது. 2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் கிடைக்கிறது.
அதேபோல 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை பெற்று கொள்ளலாம். 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.7 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 16 மில்லியன் கலர் டெப்த் வருகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எம்05 போனில் யு-கட் செல்பீ ஷூட்டர் டிசைன் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) சப்போர்ட் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி செகண்டரி கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) இந்த ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் 50 எம்பி கேமராவே எதிர்பார்க்க முடியாது. ஆனால், இதில் அதுவும் கிடைத்து, 10X ஜூமிங் சப்போர்ட் கிடைக்கிறது.
இந்த கேமரா மூலம் ஃபுல்எச்டி (FHD) வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ கேமரா கிடைத்துள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி எம்05 ஸ்மார்ட்போனில் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு டைப்-சி போர்ட் (Type-C Port) கிடைக்கிறது.
சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) கிடைக்கிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கிடைக்கிறது. இந்த சாம்சங் 4ஜி மாடலாக இருப்பதால், டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. அதேபோல ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) மற்றும் வை-பை 802 (Wi-Fi 802) சப்போர்ட் கொடுக்கிறது.
இந்த சாம்சங் கேலக்ஸி எம்05 ஸ்மார்ட்போனை மின்ட் கிரீன் (Mint Green) கலரில் ஆர்டர் செய்து கொள்ளலாம். 8.8 எம்எம் தடிமன் கிடைக்கிறது. இருப்பினும், 195 எடை மட்டுமே கொண்டுள்ளது. இந்த சாம்சங் ஸ்மார்ட்போனுடன் சார்ஜர் கிடைக்காது. மலிவான விலைக்கு கிடைப்பதால், அது கொடுக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications