Home
Mobile

அமேசான் சிறப்பு விற்பனை: ரூ.6,249 பட்ஜெட் 50எம்பி கேமரா.. Samsung போனை வாங்க சரியான நேரம்.. எந்த மாடல்?

தற்போது அமேசான் தளத்தில் அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல் (Amazon Great Freedom Festival Sale) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் இந்த சிறப்பு விற்பனை மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் போன் ஒன்று கம்மி விலையில் வாங்க கிடைக்கிறது.

அதாவது அமேசான் தளத்தில் தற்போது நடைபெறும் சிறப்பு விற்பனையில் சாம்சங் கேலக்ஸி எம்05 ஸ்மார்ட்போனுக்கு 38 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.6,249 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. எனவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

அமேசான் சிறப்பு விற்பனை:  Samsung போனை வாங்க சரியான நேரம்.. எந்த மாடல்

சாம்சங் கேலக்ஸி எம்05 அம்சங்கள் (Samsung Galaxy M05 Specifications): 6.7 இன்ச் எச்டிபிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே உடன் சாம்சங் கேலக்ஸி எம்05 போன் வெளிவந்துள்ளது. மேலும் 720 x 1600 பிக்சல்கள், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ (20:9 aspect ratio), 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.

சக்திவாய்ந்த ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 12என்எம் (Octa Core MediaTek Helio G85 12nm)சிப்செட் உடன் சாம்சங் கேலக்ஸி எம்05 போன் வெளிவந்துள்ளது. மேலும் (Mali G52 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த சாம்சங் போன். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எம்05 ஸ்மார்ட்போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த சாம்சங் போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.

ஒன் யுஐ கோர் 6.0 (One UI Core 6.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த சாம்சங் போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு 2 வருட ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 3 வருட செக்யூரிட்டி பேட்ச்கள் கிடைக்கும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

5000mAh பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி எம்05 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 4ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

பேஸ் அன்லாக் வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எம்05 போன் வெளிவந்துள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். அதேபோல் சாம்சங் நிறுவனம் கூடிய விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M05 is available at 38 percent discount during Amazon Great Freedom Festival sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X