ஆர்டர் தூள் பறக்க போகுது.. ரூ.6499 பட்ஜெட்ல 50எம்பி கேமரா.. 5000mAh பேட்டரி.. ஆஃபரில் Samsung 5ஜி போன்..
அமேசான் தளத்தில் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி எம்05 (Samsung Galaxy M05) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக 5000mAh பேட்டரி, 50எம்பி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது சாம்சங் கேலக்ஸி எம்05 போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
தற்போது அமேசான் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எம்05 ஸ்மார்ட்போனுக்கு 35 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.6499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி எம்05 அம்சங்கள் (Samsung Galaxy M05 Specifications): 6.7 இன்ச் எச்டிபிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே உடன் சாம்சங் கேலக்ஸி எம்05 போன் வெளிவந்துள்ளது. மேலும் 720 x 1600 பிக்சல்கள், ஆஸ்பெக்ட் ரேஷியோ (20:9 aspect ratio), 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 12என்எம் (Octa Core MediaTek Helio G85 12nm)சிப்செட் உடன் சாம்சங் கேலக்ஸி எம்05 போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் (Mali G52 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த சாம்சங் போன். எனவே இந்த போனை கேமிங் பயனர்கள் நம்பி வாங்கலாம்.
ஒன் யுஐ கோர் 6.0 (One UI Core 6.0)சார்ந்த ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த சாம்சங் போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.
50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்05 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த சாம்சங் போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

5000mAh பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி எம்05 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சைடு-பேசிங் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-facing Fingerprint Scanner), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), டைப்-சி சார்ஜிங் (Type-C Charging), 4ஜிபி ரேம், 64ஜிபி ஸ்டோரேஜ், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த சாம்சங் போன் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications








