Home
Mobile

புதுசு வந்ததும்.. 6 மாசம் ஆகாத பழைய மாடல் ரூ.6000 பட்ஜெட்டில் விற்பனை.. 5000mAh, 4GB ரேம் கொண்ட Samsung போன்!

ரூ.10,000 பட்ஜெட்டில் கேலக்ஸி எப்06 5ஜி (Galaxy F06 5G), ரூ.11,000 பட்ஜெட்டில் கேலக்ஸி ஏ06 5ஜி (Galaxy A06 5G) ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த கையோடு சாம்சங் நிறுவனம் ஆனது ரூ.12,000 பட்ஜெட்டில் கேலக்ஸி எம்16 5ஜி (Galaxy M16 5G) மற்றும் ரூ.10,000 பட்ஜெட்டில் கேலக்ஸி எம்06 5ஜி (Galaxy M06 5G) ஸ்மார்ட்போன்களையும் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இந்திய சந்தையில், புதிய கேலக்ஸி எம்06 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ள நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிமுகமான கேலக்ஸி எம்05 (Samsung Galaxy M05) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.1500 விலை குறைப்பை பெற்று ரூ.6000 பட்ஜெட்டில் விற்பனையாகி கொண்டிருக்கிறது.

புதுசு வந்ததும்.. 6 மாசம் ஆகாத பழைய மாடல் ரூ.6000 பட்ஜெட்டில் விற்பனை!

தற்போது அமேசான் இந்தியா வலைதளத்தில் சாம்சங் கேலக்ஸி எம்05 ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன், அதன் அறிமுக விலையான ரூ.7,999 க்கு பதிலாக ரூ.1500 நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.6,499 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமான நாளில் இருந்து சிங்கிள் 4ஜிபி ரேம் மற்றும் மின்ட் க்ரீன் (Mint Green) கலரில் மட்டுமே வாங்க கிடைக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

2025 மார்ச் 2 ஆம் தேதியன்று கேலக்ஸி ஏ36 (Galaxy A36), கேலக்ஸி ஏ56 (Galaxy A56) மற்றும் கேலக்ஸி ஏ26 (Galaxy A26) ஆகிய 3 மாடல்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், வரும் நாட்களில் மேலும் பல சாம்சங் ஸ்மார்ட்போன்களின் விலைகள் குறைக்கப்படலாம் அல்லது அவைகள் தள்ளுபடி விற்பனை செய்யப்படலாம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி எம்05 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 1600 X 720 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் உடனான 6.7-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ப்ராசஸரை பொறுத்தவரை இது மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. ரேம் மற்றும் ஸ்டோரேஜை பொறுத்தவரை, இது 4ஜிபி வரையிலான ரேம் மற்றும் 64ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது.

இந்த ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக மேலும் விரிவாக்கலாம். கேமராக்களை பொறுத்தவரை, இது எப்/1.8 அபெர்க்ஷர் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை முன்பக்கத்தில் உள்ள 8எம்பி கேமரா பூர்த்தி செய்யும்.

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை இது 4ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ் மற்றும் சார்ஜ் செய்வதற்கான யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது. பேட்டரியை பொறுத்தவரை, இது 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடனான 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி விலை என்ன? இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.9,499 க்கும் மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.10,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ரூ.500 வங்கி தள்ளுபடியை சேர்த்த அறிமுக விலை நிர்ணயம் ஆகும்.

இது பிளேஸிங் பிளாக் மற்றும் சேஜ் கிரீன் கலர்களில் மார்ச் 7 ஆம் தேதி முதல், அமேசான் வழியாக விற்பனைக்கு வரும். இதோடு சேர்ந்து அறிமுகமான சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேஸிக் 4ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் ரூ.11,499 க்கு வாங்க கிடைக்கும். அதே 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் ஆப்ஷன்கள் முறையே ரூ.12,999 மற்றும் ரூ.14,499 க்கு வாங்க கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M05 Gets Rs 1500 Discount Available For Rs 6499 in Amazon After Galaxy M06 5G Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X