Home
Mobile

ஆஃபர் அதகளம்.. வெறும் ரூ.6,499க்கு சாம்சங் போன்.. 8GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த சாம்சங் பிரியர்களும் அமேசான் (Amazon) தளத்தில் குவியும் விதமாக 8ஜிபி ரேம், 1டிபி மெமரி சப்போர்ட், 15W சார்ஜிங், 5,000mAh பேட்டரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்04 (Samsung Galaxy M04) போனானது, டிஸ்கவுண்ட்டில் வெறும் ரூ.6000 பட்ஜெட்டுக்கு விற்பனைக்கு வந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்04 அம்சங்கள் (Samsung Galaxy M04 Specifications): இந்த போன் 6.5 இன்ச் (1560 × 720 பிக்சல்கள்) எச்டி பிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு இன்ஃபினிட்டி-வி டிஸ்பிளே (Infinity-V Display) மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 16 மில்லியன் கலர் சப்போர்ட் வருகிறது.

ரூ.6,499க்கு சாம்சங் போன்.. 8GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்த சாம்சங் மாடலில் ஆக்டா - கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 12என்எம் சிப்செட் (Octa - Core MediaTek Helio P35 12nm) மற்றும் ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு (IMG PowerVR GE8320 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இதற்கு ஆண்ட்ராய்டு 12 (Android 12) மற்றும் ஒன் யுஐ கோர் 4.1 (One UI Core 4.1) ஓஎஸ் சப்போர்ட் வருகிறது.

இந்த போனில் 4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, 8 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி ஆகிய இரண்டு வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கிறது. அதோடு 1 டிபிக்கான மைக்ரோ எஸ்டி கார்டு (micro SD Card) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே, டூயல் நானோ சிம் (Dual Nano SIM) மற்றும் மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் வருகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி போனில் டூயல் பேக் கேமரா சிஸ்டம் (Dual Back Camera System) கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, 13 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது. அதோடு எல்இடி பிளாஷ் (LED Flash) இடம் பெற்றுள்ளது.

இந்த கேமராவில் 10x டிஜிட்டர் ஜூம் (10x Digital Zoom) சப்போர்ட் வருகிறது. அதேபோல 5 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 15W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5,000 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டைப் - சி (Type - C) சார்ஜிங் போர்ட் வருகிறது. 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack), எப்எம் ரேடியோ (FM Radio) இருக்கிறது.

இந்த போனில் டூயல் 4ஜி வோஎல்இடி (Dual 4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5 (Bluetooth 5), ஜிபிஎஸ் (GPS) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. இந்த சாம்சங் கேலக்ஸி எம்04 மாடல் ஸ்சீ கிளாஸ் கிரீன் (Sea Glass Green) மற்றும் ஷேடோ ப்ளூ (Shadow Blue) ஆகிய இரண்டு கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டபோது, இதன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.8,499 ஆகவும், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.9,499ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது. இவ்வளவு மலிவான விலையில் சாம்சங் போன் கிடைத்ததால், விற்பனையில் சக்கைப்போடு போட்டது.

இந்த விற்பனையை மீண்டும் சூடுபிடிக்க வைக்கும் விதமாக அமேசான் (Amazon) தளத்தில், இந்த போனுக்கு நம்ப முடியாத தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது, இந்த போனின் 4 ஜிபி ரேம் + 64 மெமரி மாடலானது, வெறும் ரூ.6,499க்கும், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலானது, ரூ.7,499க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதோடு ரூ.6,150 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M04 With 8GB RAM, 5000mAh Battery Discount on Amazon Specifications, Price, Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X