ரூ.8,999 விலையில் தரமான அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி M02s ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

|

சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி எம் 02s என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட்போன் இப்போது ரூ. 8,999 என்ற குறைந்தபட்ச விலை முதல் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் பற்றிய முழு விபரம் மற்றும் விலை பட்டியலை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

சாம்சங் கேலக்ஸி M02s

சாம்சங் கேலக்ஸி M02s

முக்கிய விவரக்குறிப்புகளை பொறுத்தவரையில் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எம் 02s ஸ்மார்ட்போன், 15W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் உடன் பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பை கொண்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி M02s வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு நேபாளத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் இப்போது இந்தியாவிலும் வந்துள்ளது.

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி M02s விலை மற்றும் விற்பனை விபரம்

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி M02s விலை மற்றும் விற்பனை விபரம்

சாம்சங் கேலக்ஸி M02s போனின், 3 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் ரூ.8,999 என்ற விலையிலும், இதன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ. 9,999 என்ற விலையிலும் பிளாக், ப்ளூ மற்றும் ரெட் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு கிடைக்கும். இது அமேசான்.இன், சாம்சங்.காம் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய சில்லறை கடைகள் வழியாக விற்பனைக்கு வரும்.

ரூ.365-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி., தினசரி 2 ஜிபி டேட்டா- பிஎஸ்என்எல் மிரட்டல் அறிவிப்பு!

சாம்சங் கேலக்ஸி M02s விவரக்குறிப்புகள்

சாம்சங் கேலக்ஸி M02s விவரக்குறிப்புகள்

 • 6.5' இன்ச் 720x1,560 பிக்சல்கள் கொண்ட எச்டி பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் டிஎஃப்டி எல்சிடி டிஸ்பிளே
 • அட்ரினோ 506 ஜி.பீ.யு
 • ஸ்னாப்டிராகன் 450 ஆக்டா கோர் சிப்செட்
 • 3ஜிபி ரேம் / 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி வரை ஸ்டோரேஜ்
 • மைக்ரோ எஸ்.டி மூலம் 1TB வரை ஸ்டோரேஜ்
 • ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான சாம்சங் ஒன் யுஐ இயங்குதளம்
டிரிபிள் கேமரா அமைப்பு

டிரிபிள் கேமரா அமைப்பு

 • 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா '
 • 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார்
 • 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ்
 • 5 மெகாபிக்சல் செல்பி கேமரா
 • ஆட்டோ ஃபிளாஷ்
 • டிஜிட்டல் ஜூம்
 • எச்டிஆர்
 • 15W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
 • 5000mAh பேட்டரி

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung Galaxy M02s Launched in India With Triple Rear Cameras at Budget Price : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X