Home
Mobile

ரூ.6,999 மட்டுமே: 2 கேமராக்கள், 5000 எம்ஏஎச் பேட்டரியோடு சாம்சங் கேலக்ஸி எம்02!

இரட்டை பின்புற கேமராக்கள், 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை குறித்து பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போன் மலிவு விலை தொலைபேசியாக அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது அறிமுகம் செய்துள்ள புதிய மாடல் ஸ்மார்ட்போன் கடந்தாண்டு ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி எம் 01 ஸ்மார்ட்போனின் வாரிசாக இருக்கிறது.

மீடியா டெக் எஸ்ஓசி சிப்செட்

மீடியா டெக் எஸ்ஓசி சிப்செட்

சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போன் மீடியா டெக் எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இது இரட்டை பின்புற கேமராக்களுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் பல்வேறு பட்ஜெட் விலை மாடலுக்கு நிகர போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது.

ரூ.6,999 என்ற விலையில் அறிமுகம்

ரூ.6,999 என்ற விலையில் அறிமுகம்

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போன் கிடைக்கும் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம். சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி சேமிப்பு வசதியுடன் வருகிறது. இதன் விலை ரூ.6,999 ஆக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போன் கருப்பு, நீலம், சாம்பல் மற்றும் சிவப்பு வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.

பிப்ரவரி 9 ஆம் தேதிமுதல் விற்பனை

பிப்ரவரி 9 ஆம் தேதிமுதல் விற்பனை

அமேசான், சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோரிலும் பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் முன்னணி ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எம் 02 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்

இரட்டை சிம் ஆதரவுடனும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தோடு இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த டிஸ்ப்ளே 3 ஜிபி ரேம், மீடியா டெக் எஸ்ஓசி மூலம் இயக்கப்படும்.

இரட்டை பின்புற கேமராக்கள்

இரட்டை பின்புற கேமராக்கள்

சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போனில் இரட்டை பின்புற கேமரா அமைப்புகள் இருக்கிறது. இதில் 13 மெகாபிக்சல் பிரதான கேமரா, 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமராக்கள் இருக்கிறது. இதன் முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போன் 32 ஜிபி உள்சேமிப்பு வசதி இருக்கிறது. இதில் 1 டிபி வரை மெமரி விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதி இருக்கிறது. 5000 எம்ஏஎச் பேட்டரி, 10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இதில் உள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M02 Smartphone Launched in India at Rs.6,999
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X