Home
Mobile

இன்று விற்பனைக்கு வரும் மலிவு விலை சாம்சங் கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போன்.! முழு விவரம்.!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போன் ஆனது இன்று மதியம் 12 மணி அளவில் அமேசான் வலைத்தளத்தில் விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த மென்பொருள் மற்றும் அசத்தலான கேமராக்களுடன் வெளிவந்துள்ளது.

கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போனின் விலை

கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போனின் விலை

2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,999-ஆக உள்ளது. ஆனால் இந்த சாதனத்தின் அறிமுகச் சலுகையாக குறிப்பிட்ட விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போன் மீடியா டெக் எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இது இரட்டை பின்புற கேமராக்களுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் பல்வேறு பட்ஜெட் விலை மாடலுக்கு நிகர போட்டியாக
இருக்கும் என கருதப்படுகிறது.

6.5 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

6.5 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

இரட்டை சிம் ஆதரவுடனும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தோடு இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த டிஸ்ப்ளே 3 ஜிபி ரேம், மீடியா டெக் எஸ்ஓசி மூலம் இயக்கப்படும்.

 13 மெகாபிக்சல் பிரதான கேமரா

13 மெகாபிக்சல் பிரதான கேமரா

சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போனில் இரட்டை பின்புற கேமரா அமைப்புகள் இருக்கிறது. இதில் 13 மெகாபிக்சல் பிரதான கேமரா, 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமராக்கள் இருக்கிறது. இதன் முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

 எஸ்டி கார்டு ஸ்லாட்

எஸ்டி கார்டு ஸ்லாட்

சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போன் 32 ஜிபி உள்சேமிப்பு வசதி இருக்கிறது. இதில் மெமரி விரிவாக்கக்கூடிய மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட் வசதி இருக்கிறது. 5000 எம்ஏஎச் பேட்டரி, 10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இதில் உள்ளது.

 ஸ்மார்ட்போன் ஆனது நீலம்

குறிப்பாக இந்த சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போன் ஆனது நீலம், சிவப்பு, சாம்பல், கருப்பு போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்பிற்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

இணைப்பு ஆதரவுகள்

இணைப்பு ஆதரவுகள்

இரட்டை 4 ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5, 3.5 மிமீ ஆடியோ ஜாக், ஜிபிஎஸ், க்ளோனாஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் 206 கிராம் எடை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M02 Sale Starts Today in India: Price, Offers and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X