Home
Mobile

சாம்சங் கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போனுக்கு விலை உயர்வு: முழு விவரம்.!

சாம்சங் நிறுவனத்தின் அனைத்து ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்று தான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களும் தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளது. இந்நிலையில் சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலை உயர்வு அறிவித்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்02

சாம்சங் கேலக்ஸி எம்02

இரட்டை பின்புற கேமராக்கள், 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் சாம்சங் கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அண்மையில் மும்பையைச் சேர்ந்த சில்லறை விற்பனையாளர் மகேஷ் டெலிகாம் அறிவித்த தகவலின்படி, 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எம்2 மாடலின் விலை ரூ.7,499-ஆக உள்ளது. அதாவது ரூ.500 விலை உயர்த்தப்பட்டுள்ளது.

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி

அதேபோல் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எம்2 மாடலுக்கு ரூ.500 விலை உயரத்தப்பட்டு ரூ.7,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இப்போது இந்த சாதனங்களின் பல்வேறு சிறப்பம்சங்களை விரிவாகப் பார்ப்போம். குறிப்பாக இந்த அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற தளங்களில் இந்த புதிய விலையில் கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

கார்டெக்ஸ்-ஏ53 குவாட்-கோர் மீடியா டெக் எம்டி6739W சிப்செட்

சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போன் 1.5ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ்-ஏ53 குவாட்-கோர் மீடியா டெக் எம்டி6739W சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது இரட்டை பின்புற கேமராக்களுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் பல்வேறு பட்ஜெட் விலை மாடலுக்கு நிகர போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது.

 ஆண்ட்ராய்டு 10

இரட்டை சிம் ஆதரவுடனும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தோடு இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த டிஸ்ப்ளே 3 ஜிபி ரேம், மீடியா டெக் எஸ்ஓசி மூலம் இயக்கப்படும்.

ஸ்மார்ட்போனில் இரட்டை

சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போனில் இரட்டை பின்புற கேமரா அமைப்புகள் இருக்கிறது. இதில் 13 மெகாபிக்சல் பிரதான கேமரா, 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமராக்கள் இருக்கிறது. இதன் முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போன் 32 ஜிபி உள்சேமிப்பு வசதி இருக்கிறது. இதில் 1 டிபி வரை மெமரி விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதி இருக்கிறது. 5000 எம்ஏஎச் பேட்டரி, 10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இதில் உள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M02 Gets Yet Another Price Hike In India: All You Need To Know: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X