மிகக் குறைந்த விலையில் சாம்சங் கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போனா?- விரைவில் வெளியாகும் என தகவல்

|

சாம்சங் கேலக்ஸி எம் 02 இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் என பிஐஎஸ் சான்றிதழ் தெரிவிக்கிறது. சாம்சங் கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போன் இரட்டை சிம் ஆதரவு, குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 எஸ்ஓசி ஆதரவு உள்ளிட்ட அம்சங்களோடு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி எம் 01 இந்தாண்டு ஜூன் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த தொடரில் சாம்சங் கேலக்ஸி எம் 02 என்ற புதிய ஸ்மார்ட்போனை நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிஐஎஸ் சான்றிதழ்

பிஐஎஸ் சான்றிதழ்

சாம்சங் கேலக்ஸி எம் 02, பிஐஎஸ் சான்றிதழ் இணையதளத்தில் இடம்பெற்றிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

கீக்பெஞ்ச் வெளியிட்டுள்ள அறிக்கை

கீக்பெஞ்ச் வெளியிட்டுள்ள அறிக்கை

கீக்பெஞ்ச் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போன் (SM-M025F) குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் இரட்டை சிம் ஆதரவோடு வரும்.

2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு

2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு

சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதி இருக்கும் என கூறப்படுகிறது. மெமரி விரிவாக்கத்திற்கு மைக்ரோ எஸ்டி கார்ட் பொருத்தும் வசதி இதில் இருக்கிறது.

Airtel வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி: Jio-வுக்கு போட்டியாக Airtel வழங்கும் இலவச சலுகை!Airtel வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி: Jio-வுக்கு போட்டியாக Airtel வழங்கும் இலவச சலுகை!

ஆண்ட்ராய்டு 10 ஓஸ் ஆதரவு

ஆண்ட்ராய்டு 10 ஓஸ் ஆதரவு

சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஓஸ் ஆதரவோடு இயக்கப்படுகிறது. இதில் ப்ளூடூத் 4.2, வைஃபை மற்றும் எல்டிஇ ஆதரவு இருக்கிறது. சாம்சங் கேலக்ஸி எம் 02 இந்திய மதிப்பில் சுமார் ரூ.10,000 ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எம் 01 ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி எம் 01 ஸ்மார்ட்போன்

முன்னதாக இந்த தொடரில் வெளியான சாம்சங் கேலக்ஸி எம் 01 ஸ்மார்ட்போன் 5.71 இன்ச் எச்டி + டிஸ்ப்ளே, 1560x720 பிக்சல் தீர்மானம் ஆண்ட்ராய்டு 10 ஆதரவு 4000 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது.

இரட்டை பின்புற கேமரா அமைப்பு

இரட்டை பின்புற கேமரா அமைப்பு

3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்புடன் வரும் சாம்சங் கேலக்ஸி எம் 01 ஸ்மார்ட்போனில் இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இதில் 13 மெகாபிக்சல் பிரதான கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung Galaxy M02 Gets BIS Certification: Here the Expected Specification

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X