சாம்சங் கேலக்ஸி எம்01எஸ் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி.! என்ன தெரியுமா?
சாம்சங் நிறுவனத்தின் அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் கேலக்ஸி எம்01எஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 11 சார்ந்த One UI 3.1 Core அப்டேட் கிடைத்துள்ளது. மேலும் இந்த அப்டேட் ஜூன் 2021 ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்புடன் தொகுக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் கேலக்ஸி எம்01எஸ் பயனர்களுக்கு இந்த புதிய அப்டேட் கிடைத்துள்ளது. விரைவில் மற்ற நாடுகளில் உள்ள கேலக்ஸி எம்01எஸ் பயனர்களுக்கும் இந்த அப்டேட் கிடைக்கும்.
சாட் பபிள்ஸ், மேம்பட்ட தனியுரிமை மற்றும் பாதுகாப்பு, மேம்பட்ட மீடியா கண்ட்ரோல்ஸ், ஒன் டைம் பெர்மிஷன், நோட்டிபிகேஷன் ஹிஸ்டரி, ப்ரியாரிட்டி சாட் பங்க்ஷன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட். மேலும் இந்த சாதனத்தின்
பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எம்1எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.2-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி வி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.பின்பு 1560 x 720 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
இந்த கேலக்ஸி எம்1எஸ் ஸ்மார்ட்போனில் 2ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ பி22 ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்தது. தற்போது ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி எம்1எஸ் சாதனம் ஆனது 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்புக்க அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
சாம்சங் கேலக்ஸி எம்1எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி செகன்டரி லென்ஸ் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

இந்த கேலக்ஸி எம்1எஸ் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இவற்றுள் அடக்கம். பின்பு பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிந்துள்ளது. 4 ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ, மைக்ரோ-யூ.எஸ்.பி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எம்1எஸ் ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications