Home
Mobile

இதைவிட கம்மியான விலையில் சாம்சங் கேலக்ஸி M01 கிடைக்காது! விலை குறைப்புடன் நாளை விற்பனை!

சாம்சங் நிறுவனம் சமீபத்தில், சாம்சங் கேலக்ஸி M01 மற்றும் சாம்சங் கேலக்ஸி M01s என்ற இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களை வெறும் ரூ .10,000 என்ற விலையில் இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தியது. ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் தற்பொழுது நம்ப முடியாத விலை குறைப்புடன் நாளை விற்பனைக்கு வருகிறது. இதை எப்படி வாங்கலாம்? எங்குச் சலுகையுடன் வாங்கலாம் என்பதைப் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி M01 ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி M01 ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி M01 ஸ்மார்ட்போன் மாடலை இந்த ஆண்டு ஜூன் மாதம் வெறும் ரூ .9,999 என்ற விலையில் அறிமுகம் செய்தது. இதன் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் மாடலிற்கு தற்பொழுது விலை குறைப்பை நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நாளை இந்தியாவில் அமேசான் வலைத்தளத்தின் மூலம் நம்பமுடியாத தள்ளுபடி விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

புதிய தள்ளுபடி விலை

புதிய தள்ளுபடி விலை

சாம்சங் கேலக்ஸி M01 ஸ்மார்ட்போனின் அசல் விலையிலிருந்து ரூ. 1, 600 குறைக்கப்பட்டு வெறும் ரூ .8,399 என்ற விலையில் நாளை விற்பனை செய்யப்படவுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் அமேசானில் நாளை முதல் புதிய தள்ளுபடி விலையில் கிடைக்குமென்று சாம்சங் இந்தியா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தில் விளம்பரம் செய்துள்ளது.

ஆன்லைன் வகுப்புகளுக்கு ஒரு அற்புதமான சாய்ஸ்

ஆன்லைன் வகுப்புகளுக்கு ஒரு அற்புதமான சாய்ஸ்

பள்ளிக்கூடங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தும் இந்த நேரத்தில், குறைந்த விலையில் அருமையான ஸ்மார்ட்போன் சாதனம் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த புதிய சாம்சங் கேலக்ஸி M01 ஒரு அற்புதமான சாய்ஸ் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. சாம்சங் கேலக்ஸி M01 ஸ்மார்ட்போன் பிளாக், ப்ளூ மற்றும் ரெட் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி M01 சிறப்பம்சம்

சாம்சங் கேலக்ஸி M01 சிறப்பம்சம்

  • 5.71' இன்ச் கொண்ட எச்டி பிளஸ் இன்ஃபினிட்டி-வி டிஸ்ப்ளே
  • ஆக்டா கோர் ஸ்னாப் டிராகன் 439 பிராசஸர்
  • ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்
  • 3 ஜிபி ரேம் + 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
  • 512 ஜிபி வரையிலான மைக்ரோ எஸ்.டி கார்டு ஆதரவு
  • டூயல் கேமரா அமைப்பு
    • டூயல் கேமரா அமைப்பு
    • 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
    • 2 மெகாபிக்சல் கொண்ட அடெப்த் சென்சார்
    • 5 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் கேமரா
    • 4 ஜி வோல்டிஇ
    • வைஃபை
    • புளூடூத்
    • ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்
    • எஃப்எம் ரேடியோ
    • மைக்ரோ-யூ.எஸ்.பி
    • 3.5mm ஆடியோ ஜாக்
    • கைரேகை சென்சார் இல்லை
    • 4,000 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M01 To Be Available At Discounted Price On Amazon India From Tomorrow : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X