சாம்சங் கேலக்ஸி எம் 01, கேலக்ஸி எம் 01 எஸ் ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.!
சாம்சங் நிறுவனம் தொடர்ந்து விலைகுறைப்பை அறிவித்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதன்படி இப்போது சாம்சங் கேலக்ஸி எம் 01, கேலக்ஸி எம் 01 மாடல்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி எம் 01 மாடலின் முந்தைய விலை ரூ.7,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.7,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் கேலக்ஸி எம் 01 எஸ் மாடலின் முந்தைய விலை ரூ.9,499-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999-க்குவிற்பனை செய்யப்படுகிறது. மேலும் கேலக்ஸி பட்ஸ் பிளஸ் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.8,990-விலையில் வாங்க கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி M01 சிறப்பம்சம்
5.71' இன்ச் கொண்ட எச்டி பிளஸ் இன்ஃபினிட்டி-வி டிஸ்ப்ளே
ஆக்டா கோர் ஸ்னாப் டிராகன் 439 பிராசஸர்
ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்
3 ஜிபி ரேம் + 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
512 ஜிபி வரையிலான மைக்ரோ எஸ்.டி கார்டு ஆதரவு
டூயல் கேமரா அமைப்பு
13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
2 மெகாபிக்சல் கொண்ட அடெப்த் சென்சார்
5 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் கேமரா
4 ஜி வோல்டிஇ
வைஃபை
புளூடூத்
ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்
எஃப்எம் ரேடியோ
மைக்ரோ-யூ.எஸ்.பி
3.5mm ஆடியோ ஜாக்
கைரேகை சென்சார் இல்லை
4,000 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எம்1எஸ் டிஸ்பிளே
சாம்சங் கேலக்ஸி எம்1எஸ் ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.2-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி வி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1560 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்1எஸ் பிராசஸர்
இந்த கேலக்ஸி எம்1எஸ் ஸ்மார்ட்போனில் 2ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ பி22 ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி எம்1எஸ் கேமராக்கள்
சாம்சங் கேலக்ஸி எம்1எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி செகன்டரி லென்ஸ் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி எம்1எஸ் பேட்டரி
இந்த கேலக்ஸி எம்1எஸ் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இவற்றுள் அடக்கம். பின்பு பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிந்துள்ளது.


Click it and Unblock the Notifications