Home
Mobile

சத்தமில்லாமல் மூன்று அசத்தலான சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.!

சாம்சங் நிறுவனத்தின் மூன்று அசத்தலான ஸ்மார்ட்போன்களக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கேலக்ஸி எம் 01, கேலக்ஸி எம்01எஸ் மற்றும் கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் வாங்க முடியும். ஆனால் மக்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்த விலைகுறைப்பு சலுகை நவம்பர் 30-ம் தேதி வரை மட்டுமே இருக்கும் என்று தெரவிக்கப்பட்டுள்ளது.

 ஸ்மார்ட்போனின்

சாம்சங் கேலக்ஸி எம்01 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.7,999-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.500-விலைகுறைக்கப்பட்டு ரூ.7,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சாம்சங் கேலக்ஸி எம்01எஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.9,999-ஆக இருந்தது,
தற்சமயம் ரூ.1000-விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எம்11

அதேபோல் சாம்சங் கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.10,499-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.500-விலைகுறைக்கப்பட்டு ரூ.9,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இப்போது சாம்சங் கேலக்ஸி எம்01எஸ் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப்பார்ப்போம்.

ஸ்மார்ட்போன் மாடல்

சாம்சங் கேலக்ஸி எம்1எஸ் ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.2-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி வி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1560 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ஸ்மார்ட்போனில்

இந்த கேலக்ஸி எம்1எஸ் ஸ்மார்ட்போனில் 2ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ பி22 ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

எம்1எஸ் சாதனம் ஆனது 3ஜிபி ரேம் மற்றும்

சாம்சங் கேலக்ஸி எம்1எஸ் சாதனம் ஆனது 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்புக்க அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி

சாம்சங் கேலக்ஸி எம்1எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி செகன்டரி லென்ஸ் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

ஸ்மார்ட்போனில்

இந்த கேலக்ஸி எம்1எஸ் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இவற்றுள் அடக்கம். பின்பு பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிந்துள்ளது.

 கேலக்ஸி எம்1எஸ் ஸ்மார்ட்போனில்

சாம்சங் கேலக்ஸி எம்1எஸ் ஸ்மார்ட்போனில் 4 ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ, மைக்ரோ-யூ.எஸ்.பி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M01, Galaxy M01s and Galaxy M11 Price Slashed in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X