Samsung கேலக்ஸி M01 கோர் வெறும் ரூ.5,499 விலையில் அறிமுகம்! விற்பனை எப்போது தெரியுமா?

|

சாம்சங் நிறுவனம் தனது தற்பொழுது மலிவான விலையில் புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. தென் கொரிய நிறுவனமான சாம்சங் நிறுவனம் தற்பொழுது சாம்சங் கேலக்ஸி எம் 01 கோரை என்ற அட்டகாசமான ஸ்மார்ட்போன் மடலை நம்பமுடியாத விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் நம்பமுடியாத விலை மற்றும் சிறப்பம்சங்களைப் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம் 01 கோர்

சமீபத்தில், சாம்சங் நிறுவனம் ரூ .10,000 விலையில் இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தியது. சாம்சங் கேலக்ஸி எம் 01 மற்றும் சாம்சங் கேலக்ஸி எம்01எஸ் என்ற இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்திய நிறுவனம் தற்பொழுது, சாம்சங் கேலக்ஸி எம் 01 கோர் என்ற புதிய மாடலை வெறும் ரூ.5,499 என்ற விலையில் அறிமுகம் செய்துள்ளது.

மேக் இன் இந்தியா

டைனமிக் ஸ்கிரீன் டைம்அவுட் மற்றும் புத்திசாலித்தனமான உள்ளீடுகளுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் 'மேக் இன் இந்தியா' அம்சங்களுடன் வருகிறது. சாம்சங்கின் புதிய அறிமுகமான இந்த போனில் நீட்டிக்கப்பட்ட பேட்டரி ஆயுள் அதிகபட்ச ஆற்றல் சேமிப்பு பயன்முறையுடன் வருகிறது. மேலும் டார்க் மோடு பயன்முறையையும் இது கொண்டுள்ளது. சாம்சங்கின் அனைத்து ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் ஸ்டோர்களிலும் இந்த போன் விற்பனைக்குக் கிடைக்கிறது.

இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னர், ஸ்டீபன் ஹாக்கிங் இறுதியாக சமர்ப்பித்த இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னர், ஸ்டீபன் ஹாக்கிங் இறுதியாக சமர்ப்பித்த "மர்மம்" அவிழ்க்கப்பட்டது.!

சாம்சங் கேலக்ஸி M01 கோர் சிறப்பம்சம்

சாம்சங் கேலக்ஸி M01 கோர் சிறப்பம்சம்

  • 5.3' இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே
  • அண்ட்ராய்டு கோ இயங்குதளம்
  • ஆக்டா கோர் மீடியாடெக் எம்டி 6739 சிப்செட்
  • 1 ஜிபி மற்றும் 2 ஜிபி ரேம்
  • 16 ஜிபி மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ்
  • 8 மெகா பிக்சல் கொண்ட பின்புற கேமரா
  • 5 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா
  • 3000 எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.
  • டைனமிக் ஸ்கிரீன் அவுட்

    டைனமிக் ஸ்கிரீன் அவுட் மற்றும் பவர் ஆப்டிமைசேஷனுடன் கூடிய டிஸ்பிளே அம்சம் போன்ற பல்வேறு மேக் இன் இந்தியா அம்சங்களை இதில் சேர்த்துள்ளது. மேலும், சாதனம் ஒரு புத்திசாலித்தனமான புகைப்பட அம்சத்துடன் வருகிறது, இது ஒத்த புகைப்படங்களைத் தானாகவே கண்டறிந்து, சிறந்த புகைப்படங்களைக் கொண்ட பயனர்களை அறிவுறுத்துகிறது, அதே நேரத்தில் மற்ற படங்களை நிராகரிக்கும்போது உகந்த உள் சேமிப்பிடத்தை தருகிறது.

    விலை

    சாம்சங் கேலக்ஸி எம் 01 கோர் இரண்டு வேரியண்ட் வகைகளில் கிடைக்கிறது, சாம்சங் கேலக்ஸி எம் 01 கோரின் 1 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் மாடன் விலை வெறும் ரூ .5,499 ஆகும். அதேபோல், இதன் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ .6,499 ஆக அறிமுகம் செய்யப்பட்டுளள்து. இந்த ஸ்மார்ட்போன் கருப்பு, நீலம் மற்றும் சிவப்பு ஆகிய மூன்று வண்ண வகைகளில் கிடைக்கும்.

    BSNL: தினமும் 3ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு கிடைக்கும் சிறந்த 4ஜி ப்ரீபெய்ட் திட்டங்கள்!BSNL: தினமும் 3ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு கிடைக்கும் சிறந்த 4ஜி ப்ரீபெய்ட் திட்டங்கள்!

    விற்பனை

    புதிய சாம்சங் கேலக்ஸி எம் 01 கோர் விற்பனையை பொறுத்தவரை, இந்த புதிய சாதனம் ஜூலை 29, 2020 முதல் சாம்சங் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் முன்னணி இ-காமர்ஸ் தளமான அமேசானில் வாங்குவதற்கு கிடைக்கும் என்று சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், இந்த சாதனம் சாம்சங்கின் ஆஃப்லைன் கடைகளில் கிடைக்கும்.

Best Mobiles in India

Read more about:
English summary
Samsung Galaxy M01 Core Launched in India At Cheap Price Of Rs.5,499 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X