மிரண்டுபோன மார்க்கெட்.. AMOLED டிஸ்பிளே.. 25W சார்ஜிங்.. புது Samsung 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் தனது புதிய சாம்சங் கேலக்ஸி ஜம்ப் 4 (Samsung Galaxy Jump 4) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் எக்ஸிநோஸ் சிப்செட், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ், ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய சாம்சங் போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி ஜம்ப் 4 அம்சங்கள் (Samsung Galaxy Jump 4 specifications): 6.7-இன்ச் சூப்பர் அமோலெட் டிஸ்பிளே (Super AMOLED display) வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஜம்ப் 4 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் 1000 நிட்ஸ் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.

சக்திவாய்ந்த எக்ஸிநோஸ் 1380 சிப்செட் (Exynos 1380 chipset) உடன் சாம்சங் கேலக்ஸி ஜம்ப் 4 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். எனவே இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
ஒன் யுஐ 7 ( One UI 7) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15)இயங்குதள வசதியுடன் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த சாம்சங் ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 197 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.
12எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஜம்ப் 4 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. பின்பு இந்த போனின் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஜம்ப் 4 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
5000mAh பேட்டரி வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஜம்ப் 4 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனின் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி, வைஃபை 6, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன. மேலும் பிளாக் மற்றும் லைட் கிரீன் நிறங்களில் இந்த போனை வாங்க கிடைக்கும்.
ஆனால் சாம்சங் கேலக்ஸி ஜம்ப் 4 தென் கொரியாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுவும் இந்த போனின் விலை 449,900 KRW (இந்திய மதிப்பில் ரூ.28,463) ஆகும். இந்த சாம்சங் கேலக்ஸி ஜம்ப் 4 ஸ்மார்ட்போன் மற்ற நாடுகளில் சாம்சங் கேலக்ஸி எப்36 எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications