3ஜிபி ரேம் & 5.5-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் புதிய கேலக்ஸி ஜே8.!
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
சமீபத்தில், சாம்சங் ஜே7 மற்றும் ஜே4 ஸ்மார்ட்போன்கள் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்தது. அந்த வரிசையில் இப்போது புதிய கேலக்ஸி ஜே8 ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் மாடல் எண் எஸ்எம்-ஜே800எப்என் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
கேலக்ஸி ஜே8 ஸ்மார்ட்போன் மாடலில் ஆண்ட்ராய்டு ஓரியோ மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் கேமரா பகுதிக்கு அதிக முக்கியதுவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேலக்ஸி ஜே8 :
கேலக்ஸி ஜே8 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.5-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்1280 x 720 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஆண்ட்ராய்டு ஓரியோ:
கேலக்ஸி ஜே8 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7885 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

16எம்பி ரியர் கேமரா:
இந்த கேலக்ஸி ஜே8 ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.


3000எம்ஏஎச்:
கேலக்ஸி ஜே ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications