சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
சாமசங் கேலக்ஸி ஜே8 ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் மூன்று ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது, மும்பை மொபைல் விற்பனையாளர் மகேஷ் டெலிகாம் இந்த அறிவப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மூன்று ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடியாக விலைகுறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்சமயம் கேலக்ஸி ஜே8, கேலக்ஸி ஜே4 மற்றும் கேலக்ஸி ஜே7 ப்ரைம் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பை அறிவித்துள்ளது மகேஷ் டெலிகாம் நிறுவனம். மேலும் இந்த அதிரடி சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலைகுறைப்பு:
சாமசங் கேலக்ஸி ஜே8 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.18,990-ஆக இருந்தது, தற்சமய் விலைகுறைக்கப்பட்டு ரூ.17,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று கேலக்ஸி ஜே4 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு 8,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கேலக்ஸி ஜே7 ப்ரைம் ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.9,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கேலக்ஸி ஜே4:
கேலக்ஸி ஜே4 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.5-இன்ச் டிஸ்பிளே, 1.4ஜிகாஹெர்ட்ஸ் எக்ஸிநோஸ் செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் மற்றும் 3000எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம். குறிப்பாக 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாமசங் கேலக்ஸி ஜே8:
சாமசங் கேலக்ஸி ஜே8 ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது. அதன்பின்பு 6-இன்ச் டிஸ்பிளே, 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக 16எம்பி+5எம்பி ரியர் கேமரா மற்றும் 16எம்பி செல்பீ கேமரா ஆதரவு இவற்றுள் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்கஸி ஜே7 ப்ரைம்:
சாம்சங் கேலக்கஸி ஜே7 ப்ரைம் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.5-இன்ச் டிஸ்பிளே, ஆக்டோ-கோர் 1.6ஜிகாஹெர்ட்ஸ் செயலி மற்றும் ஆண்ட்ராய்டு 6.0 இயங்குதளம் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பாக 13எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா அதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications