13எம்பி ரியர் கேமராவுடன் வெளிவரும் அசத்தலான கேலக்ஸி ஜே8 (2018).!
இந்த கேலக்ஸி ஜே8(2018 ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜே8(2018) ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, அதன்படி பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி ஜே8(2018) ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெறும். மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

சாம்சங் கேலக்ஸி ஜே8(2018):
சாம்சங் கேலக்ஸி ஜே8(2018) ஸ்மார்ட்போன் பொதுவாக 5.5-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1280 x 720பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகதிம் அடிப்படையில் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு ஓரியோ:
சாம்சங் கேலக்ஸி ஜே8(2018) ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7885 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

13எம்பி ரியர் கேமரா:
இந்த கேலக்ஸி ஜே8(2018 ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றஇணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.


3000எம்ஏஎச்:
கேலக்ஸி ஜே8(2018 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பற்றிய விவரங்கள் வெளிவரவில்லை.


Click it and Unblock the Notifications