5.7-இன்ச் டிஸ்பிளே & ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ உடன் அசத்தும் கேலக்ஸி ஜே8 (2018).!
இந்த கேலக்ஸி ஜே8 (2018) ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய டூயல் செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, தற்போது ஆன்லைனில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் 5.7-இன்ச் டிஸ்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்துடன் புதிய கேலக்ஸி ஜே8 (2018) ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது அந்நிறுவனம். இந்த ஸ்மார்ட்போனில் அதிகம் எதிர்பார்த்த டூயல் ரியர் கேமரா இடம்பெறவில்லை.மேலும் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது வெளிவந்துள்ள அறிவிப்பில் கேலக்ஸி ஜே8 (2018) ஸ்மார்ட்போன் மாடலுக்கு எக்ஸிநோஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது, அதன்பின்பு டூயல் செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த கேலக்ஸி ஜே8 (2018) ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்திய மொபைல்
சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

கேலக்ஸி ஜே8 (2018) :
கேலக்ஸி ஜே8 (2018) ஸ்மார்ட்போன் பொதுவாக 5.5-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 720பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஆண்ட்ராய்டு ஓரியோ:
கேலக்ஸி ஜே8 (2018) ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7885 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.


12எம்பி ரியர் கேமரா:
இந்த கேலக்ஸி ஜே8 (2018) ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய டூயல் செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

3000எம்ஏஎச்:
கேலக்ஸி ஜே8 (2018) ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications