ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்துடன் வெளிவரும் கேலக்ஸி ஜே8(2018).!
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
மிகவும் அதிகம் எதிர்பார்த்த சாம்சங் கேலக்ஸி ஜே8(2018) ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது, அதன் அடிப்படையில் இந்த கேலக்ஸி ஜே8 சாதனத்திற்கு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் மாடல் எண் பொறுத்தவரை எஸ்எம்-ஜே800எப் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது, மேலும் விரைவில் வெளிவரும் கேலக்ஸி ஜே8(2018) ஸ்மார்ட்போன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கேலக்ஸி ஜே8 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை எக்ஸிநோஸ் 7870 எஸ்ஒசி செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு வைஃபை சான்றிதழ் தற்சமயம் வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஜே8(2018) ஸ்மார்ட்போன் பொதுவாக 5.5-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1280 x 720 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகதிம் அடிப்படையில் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த கேலக்ஸி ஜே8(2018 ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. கேலக்ஸி ஜே8(2018 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பற்றிய விவரங்கள் வெளிவரவில்லை.


மேலும் கேலக்ஸி ஜே8 பிளஸ்(2018) ஸ்மார்ட்போனின் சில தகவல்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதன்படி எக்ஸிநோஸ் 7870 எஸ்ஒசி செயலி மற்றும் 4ஜிபி ரேம் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். பின்பு கைரேகை சென்சார் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications