அதிரடி விலைக்குறைப்பில் சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரைம் மற்றும் ஜே5 ப்ரைம்.!

இரண்டு கருவிகளில், கேலக்ஸி ஜே7 ப்ரைம் தான் ஒரு உயர் இறுதியில் மாதிரியாக திகழ்கிறது.

|

முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சாம்சங் நிறுவனம் கடந்த மே மாதத்தில், இந்தியாவில் அதன் ஜே தொடர் வரிசையிலான கேலக்ஸி ஜே7 ப்ரைம் மற்றும் ஜே5 ப்ரைம் ஆகிய இரண்டு கருவிகளின் புதிய சேமிப்பு மாதிரிகளை அறிமுகப்படுத்தியது.

கடந்த அக்டோபர் 2016-இல் வெளியிடப்பட்ட அசல் கருவிகளான ஜே7 ப்ரைம் மற்றும் ஜே5 ப்ரைம் ஸ்மார்ட்போன்களின் அப்கிரேட் வெர்ஷன் என்பதும், நிறுவனத்தின் மிக சிறந்த விற்பனை பிரிவில் ஜே தொடர் மாதிரி முக்கிய பங்கு வகிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய சேமிப்பு மாதிரி

புதிய சேமிப்பு மாதிரி

அந்த விற்பனை வேகத்தை தொடரும் ஒரு முயற்சியாக சாம்சங் நிறுவனம் புதிய விலை நிர்ணயத்தில், கேலக்ஸி ஜே7 ப்ரைம் மற்றும் ஜே5 ப்ரைம் ஸ்மார்ட்போன்களின் புதிய சேமிப்பு மாதிரிகளை வெளியிட்டது. அக்கருவிகளுக்கு தற்போது விலைகுறைப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.

அமோஎல்இடி டிஸ்பிளே

அமோஎல்இடி டிஸ்பிளே

இரண்டு கருவிகளில், கேலக்ஸி ஜே7 ப்ரைம் தான் ஒரு உயர் இறுதியில் மாதிரியாக திகழ்கிறது. இது ஹோம் பொத்தானில் கைரேகை சென்சார் கொண்டு ஒரு 5.5 அங்குல முழு எச்டி (1920x1080p) சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளே கொண்டுள்ளது.

கேமரா

கேமரா

மேலும் 3ஜிபி ரேம், 32ஜிபி உள்ளடக்க சேமிப்பு, 256ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு மற்றும் ஒரு 3,300 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ள இந்த தொலைபேசி எஃப் / 1.9, எல்இடி ப்ளாஷ் கொண்ட 13எம்பி ரியர் கேமரா மற்றும் எப்/1.9 துல்லியத்துடனான 8எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.

பேட்டரித்திறன்

பேட்டரித்திறன்

மறுகையில் கேலக்ஸி ஜே5 ப்ரைம் ஆனது ஒரு சிறிய 5.0 அங்குல எச்டி திரை மற்றும் க்வாட் கோர் சிபியூ, 2 ஜிபி ரேம், 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு, 13எம்பி முதன்மை கேமரா, 5எம்பி செல்பீ கேமரா மற்றும் 2,400எம்ஏஎச் பேட்டரித்திறன் ஆகிய நன்மைகளை கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரைம்

சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரைம்

கருப்பு மற்றும் தங்கம் ஆகிய இரண்டு வண்ணம் மாறுபாடுகளில் கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரைம் கருவிக்கு ரூ.2000/- விலைகுறைக்கப்ட்டு தற்போது ரூ.14,900/-க்கு கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஜே5 ப்ரைம்

சாம்சங் கேலக்ஸி ஜே5 ப்ரைம்

மறுகையில் அதே வண்ண மாறுபாடுகளில் கிடைக்கும் சாம்சங் ஜே5 ப்ரைம் ஆனதும் ரூ.2000/- விலை குறைக்கப்பெற்று தற்போது ரூ.12,900/- என்ற விலை நிர்ணயம் பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy J7 Prime and J5 Prime 32GB smartphones get a price cut. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X