இந்தியா: 5.5-இன்ச் டிஸ்பிளேவுடன் சாம்சங் கேலக்ஸி ஜே7 பிரைம் 2 அறிமுகம்.!
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 256ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, தற்சமயம் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஜே7 பிரைம் 2 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். இதற்கு முன்பு அறிமுகம் செய்த எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் உலகம் முழுவதும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கூறப்படும் நுண்ணறிவு ஸ்கேன் ஆனது கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9+ கருவிகளின் முன்பக்க கேமராவையே அதன் ஐரிஸ் ஸ்கேனராக பயன்படுத்தும். இது சவாலான ஒளி சூழல்களில் கூட ஒரு பயனரின் முகத்தை கண்டறிய உதவுகின்றன. மேலும் இப்போது அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி ஜே7 பிரைம் 2 சாதனத்தில் சிறந்த சேமிப்பு திறன் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி ஜே7 பிரைம் 2 :
சாம்சங் கேலக்ஸி ஜே7 பிரைம் 2 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.5-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1920 x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் கொண்டவையாக உள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

எக்ஸிநோஸ்:
சாம்சங் கேலக்ஸி ஜே7 பிரைம் 2 ஸ்மார்ட்போனில் 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்டராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த கேலக்ஸி ஜே7 பிரைம் 2 ஸ்மார்ட்போன்.

சேமிப்பு:
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 256ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

13எம்பி ரியர் கேமரா:
இந்த சாம்சங் கேலக்ஸி ஜே7 பிரைம் 2 ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். இதனுடைய செல்பீ கேமரா 13மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்றஇணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் .


3300எம்ஏஎச்:
சாம்சங் கேலக்ஸி ஜே7 பிரைம் 2 ஸ்மார்ட்போனில் 3300எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலைப்பொறுத்தவரை ரூ.13,990-ஆக உள்ளது. பின்னர் ஆன்லைன் ஸ்டோர்களில் மிக எளிமையாக இந்த ஜே7 பிரைம் 2 ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications