ரூ.8,300/-விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்.!
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ இயக்க முறைமையின்கீழ் இயங்குகிறது. ஒரு கைரேகை ஸ்கேனரை வழங்குகிறது.
சாம்சங் நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பை அறிவித்த வண்ணம் உள்ளது, அதன்படி கேலக்ஸி ஜே7 பிரைம் என்ற ஸ்மார்ட்போன் மாடலுக்கு இப்போது அட்டகாசமான விலைகுறைப்பை அறிவித்துள்ளது
சாம்சங் நிறுவனம்.
மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலைகுறைக்கப்பட்ட அறிவிப்பை மும்பை மொபைல் போன் விற்பனையாளர் மகேஷ் டெலிகாம் தெரிவித்துள்ளது. பொதுவாக இந்த ஸ்மார்ட்போன் தங்கம் மற்றும் கருப்பு நிறத்தில் கிடைக்கும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலைகுறைப்பு:
சாம்சங் கேலக்ஸி ஜே7 பிரைம் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.18,790-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.8,300 வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.10,490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு
சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரைம் அம்சங்கள்
உலோக வடிவமைப்பை கொண்ட சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரைம் அம்சங்களை பொறுத்தமட்டில், ஒரு 5.5 அங்குல 2.5டி கிளாஸ்
டிஸ்பிளே (1920x1080 பிக்ஸல் தீர்மானம்) கொண்டுள்ளது அது கொரில்லா கிளாஸ் 4 கொண்டு பாதுகாக்கப்படுகின்றது.

சேமிப்பு
மேலும் இக்கருவி 1.6ஜிஹாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது உடன் 256 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி அட்டை கொண்டு விரிவாக்கக்கூடிய சேமிப்பு ஸ்லாட் உள்ளது.

ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ இயக்க முறைமையின்கீழ் இயங்குகிறது. ஒரு கைரேகை ஸ்கேனரை
வழங்குகிறது, அடகு கருவியின் ஹோம் பொத்தாநுங் ஒருங்கிணைக்கபட்டுள்ளது. ஒரு 3300எம்ஏச் பேட்டரி கொண்டு
ச்கதியூட்டப்படுகின்றது.


Click it and Unblock the Notifications