டூயல் கேம், பிக்ஸ்பை அசிஸ்டென்ட் உடன் கேலக்ஸி ஜே7 ப்ளஸ்.!

|

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜே7 ப்ளஸ் ஸ்மார்ட்போன் தான் ஸ்மார்ட்போன் சந்தையின் ஹாட் டாப்பிக்.!

இரட்டை கேமரா அமைப்பு மற்றும் பிக்ஸ்பை (Bixby) செயற்கை நுண்ணறிவு (AI) அசிஸ்டென்ட் ஆகிய ஹைஎண்ட் அம்சங்கள் கொண்டு லீக்ஸ் செய்திகளில் சிக்கிய இக்கருவி தாய்லாந்தில் அறிமுகமாகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாய்லாந்தின் தாய்மொபைல்சென்டர் இணைய தளத்திலிருந்து வெளியான லீக்ஸ் செய்தியின் வழியாக, கேலக்ஸி ஜே7+ ஆனது இரட்டை கேமராக்கள் கொண்டுருக்கும் நிறுவனத்தின் இரண்டாவது ஸ்மார்ட்போன் என்று அறியப்பட்டது. சரி வேறென்ன அம்சங்களை இக்கருவி கொண்டிருக்கும்.?

டூயல் கேம் அம்சம்

டூயல் கேம் அம்சம்

தென் கொரிய நிறுவனமான சாம்சங் சமீபத்தில் அதன் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. அதுதான் நிறுவனத்தின் - இரட்டை கேமரா அமைப்பு அம்சம் கொண்டு வெளியான முதல் சாதனம் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து சாம்சங் கேலக்ஸி ஜே7ஸ்மார்ட்போனின் மேம்பாடு பதிப்பான கேலக்ஸி ஜே7 ப்ளஸ் ஸ்மார்ட்போனில் டூயல் கேம் அம்சம் இடம்பெறுமென்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வரவிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல லீக்ஸ் செய்திகளும் வெளியான வண்ணம் உள்ளன.

4ஜிபி ரேம்

4ஜிபி ரேம்

அதன்படி கேலக்ஸி ஜே7+ ஆனது 1920 x 1080 என்ற தீர்மானம் கொண்ட ஒரு 5.5 அங்குல சூப்பர் அமோ எல்இடி டிஸ்ப்ளே கொண்டிருக்கும். உடன் 4ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்க சேமிப்புடன் இணைந்த ஒரு ஆக்டா-கோர் செயலி மூலம் இயக்கப்படும்.

ஆண்ட்ராய்டு

ஆண்ட்ராய்டு

மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் வழியாக 256 ஜிபி வரை விரிவாக்க சேமிப்பு ஆதரவை வழங்கும் இக்கருவி ஒரு 3,000எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் கொண்டு இயங்கும். மேலும் இக்கருவியில் ஒரு கைரேகை ஸ்கேனர் மற்றும் பிக்ஸ்பை வாய்ஸ் அசிஸ்டென்ட் இடம்பெறும்.

கேமரா

கேமரா

கேலக்ஸி ஜே7+ சாதனத்தின் பெரிய சிறப்பம்சமான அதன் இரட்டை கேமராக்களை பொறுத்தமட்டில், எப்/ 1.7 துளை மற்றும் ஒரு எப் / 1.9 துளை கொண்ட 5 மெகாபிக்சல் சென்சார் மற்றும் ஒரு 13 மெகாபிக்சல் சென்சார் உடனான ஒரு செங்குத்து இரட்டை கேமரா அமைப்பு கொண்டுள்ளது. சாதனத்தின் முன்பக்க கேமராவை பொறுத்தமட்டில், எப் / 1.9 துளை கொண்ட ஒரு 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டு வருகிறது.

நிற விருப்பங்கள்

நிற விருப்பங்கள்

ஒரு உலோக யூனிபாடி வடிவமைப்பு கொண்டு கருப்பு, இளஞ்சிவப்பு மற்றும் தங்க நிற விருப்பங்கள் கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படும் இக்கருவி பற்றிய அனைத்து அதிகாரப்பூர்வமான விவரங்களும், வெளியீட்டிற்கு பின்னர் விரைவில் கிடைக்கப்பெறும். விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில், இக்கருவி ரூ.20,000/- என்ற புள்ளியை எட்டக்கூடும்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy J7+ with dual cameras, Bixby AI assistant leaked: Here is all we know so far. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X