Home
Mobile

டூயல் ரியர் கேம், 16எம்பி செல்பீ கேம், 3000எம்ஏஎச் உடன் சாம்சங் கேலக்ஸி ஜே7ப்ளஸ்.!

இரண்டு கேமராக்களுடன் வெளிவரும் இந்த சாதனத்தின் ஒரு கேமரா 13 மெகாபிக்சல் சென்சாரும், இரண்டாவது கேமரா 5 மெகாபிக்சல் சென்சாரும் கொண்டுள்ளது

By Muthuraj

சாம்சங் அதன் அடுத்த இரட்டை கேமரா ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் பேட்டரி வெடிப்புகளில் சிக்கி தவித்த பிரபலமற்ற நோட் 7 ஸ்மார்ட்போனை அடுத்த அப்டேட் வெர்ஷன் ஆன கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் நிறுவனத்தின் முதல் டூயல் கேம் அமைப்பு இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து தென் கொரிய நிறுவனமான சாம்சங் அதன் புதிய ஜே தொடரின் கீழ் வெளியிட்டுள்ள சாம்சங் கேலக்ஸி ஜே7+ ல் இந்த அம்சத்தை பொருந்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் தெளிவாக கேலக்ஸி ஜே (2017) மற்றும் ஜே7 ப்ரோ- வின் அடுத்தகட்ட அப்டேட் வெர்ஷன் என்பது தெரிகிறது.

டூயல் கேம்

டூயல் கேம்

இரண்டு கேமராக்களுடன் வெளிவரும் இந்த சாதனத்தின் ஒரு கேமரா 13 மெகாபிக்சல் சென்சாரும், இரண்டாவது கேமரா 5 மெகாபிக்சல் சென்சாரும் கொண்டுள்ளது.

பெரும்பாலும் பொதுவானதாக இருந்தாலும்

பெரும்பாலும் பொதுவானதாக இருந்தாலும்

கேலக்ஸி ஜே7+ ஸ்மார்ட்போன், அதன் உடன்பிறப்புகளான கேலக்ஸி ஜே7 (2017) மற்றும் ஜே7 ப்ரோ ஆகியவற்றுடன் பெரும்பாலும் பொதுவானதாக இருந்தாலும், சில அம்சங்கள் வேறுபடுகின்றன.

முழு எச்டி சூப்பர் அமோஎல்இடி டிஸ்ப்ளே

முழு எச்டி சூப்பர் அமோஎல்இடி டிஸ்ப்ளே

டிஸ்பிளேவை பொறுத்தமட்டில், இந்த அனைத்து மூன்று தொலைபேசிகளும் மிகவும் பொதுவானதாகவே தெரிகிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி ஜே7+ ஆனது 5.5 அங்குல முழு எச்டி சூப்பர் அமோஎல்இடி டிஸ்ப்ளே கொண்டு வருகிறது. இது ஒரு அலுமினிய உடலைப் பெற்று மிகவும் கடினமானதாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

4 ஜிபி ரேம்

4 ஜிபி ரேம்

கேலக்ஸி ஜே7 (2017) மற்றும் ஜே7 ப்ரோ சாதனங்கள் ஒரு எக்ஸிநோஸ் (Exynos) சிப்செட் கொண்டுருக்கவில்லை. ஆனால், புதிய ஜே7+ ஆனது மீடியா டெக் ஹெலியோ பி20 ஆக்டா-கோர் ப்ராஸசர் (2.4ஜிகாஹெர்ட்ஸ்) மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இக்கருவி 32ஜிபி உள்ளடக்க சேமிப்புடன் இணைந்த 4 ஜிபி ரேம் நினைவகத்துடன் வருகிறது மற்றும் மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 256 ஜிபி வரை விரிவாக்கலாம்.

பின்புறத்தில் இரண்டு கேமராக்களுடன்

பின்புறத்தில் இரண்டு கேமராக்களுடன்

கேமராத்துறையை பொறுத்தமட்டில், கேலக்ஸி ஜே7+ ஸ்மார்ட்போனில் ஒரு பெரிய முன்னேற்றத்தை பார்க்க முடக்கிறது. பின்புறத்தில் இரண்டு கேமராக்களுடன் வருஸ்மார்ட்போன் எப்/ 1.7 துளையுடனான 13 எம்பி கேமரா
+ எப்-1.9 துளையுடனான 5 மெகாபிக்சல் கேமரா கொண்டு வருகிறது.

16 மெகாபிக்சல் செல்பீ கேமரா

16 மெகாபிக்சல் செல்பீ கேமரா

தொலைபேசியின் இரண்டாம் நிலை கேமராவை பொறுத்தமட்டில், பொக்கே விளைவிக்கும் காட்சிகளை கைப்பற்ற உதவும் உடன் புகைப்படம் எடுத்தபின் போகஸ் மாற்றம் ஆகிய திறன்களை வழங்கும் எப்/1.9 துளையுடனான ஒரு 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டுள்ளது.

3000எம்ஏஎச் ஆதரவு

3000எம்ஏஎச் ஆதரவு

ஜே7 (2017) மற்றும் ஜே7 ப்ரோ ஆகிய கருவிகளுடன் ஒப்பிடுகையில் புதிய ஜே தொடரின் தொலைபேசியில் நாம் பார்க்கும் மற்றொரு குறிப்பிடத்தக்க மாற்றமான கேமரா அம்சத்தை தவிர, அதன் பேட்டரி துறையிலும் ஒரு மாற்றத்தை காண முடிகிறது. அதாவது, கேலக்ஸி ஜே7+ ஆனது ஒரு 3000எம்ஏஎச் ஆதரவு கொண்டுள்ளது மற்ற இரண்டு ஜே7 தொடர் தொலைபேசிகளும் 3600எம்ஏஎச் பேட்டரித்திறன் கொண்டுள்ளது.

ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே

ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி ஜே7+ ஸ்மார்ட்போன், ஹோம் பொத்தானில் இணைக்கப்பட்ட ஒரு கைரேகை சென்சார் கொண்டு வருகிறது. உடன் இக்கருவி, ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே மற்றும் ஒரு பிக்ஸ்பை முகப்பு பயன்பாட்டையும் தன்னுள் வருகிறது. ஆண்ட்ராய்டு நௌவ்கட் இயக்க முறைமை கொண்டு இயங்கும்.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

இந்த ஸ்மார்ட்போன் ரூ.24,900/- என்ற விலை நிர்ணயம் கொண்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அறிவிக்கப்பட்ட இந்த சாம்சங் கேலக்ஸி ஜே7 + ஏற்கனவே முன்பதிவுகளுக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

இந்திய விற்பனை

இந்திய விற்பனை

இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் 18-ஆம் தேதி தொடங்கி விற்பனைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த விற்பனை தாய்லாந்தில் மட்டுமே. இப்போது வரை இந்திய விற்பனை சார்ந்த எந்த வார்த்தைகளும் இல்லை.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy J7+ with dual cameras, Android Nougat and 3000mAh battery launched. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X