இந்தியா : ரூ.11,400 விலையில் சாம்சங் கேலக்ஸி ஜே7 என்எக்ஸ்டி.!
கேலக்ஸி ஜே7 என்எக்ஸ்டி பொதுவாக ஆக்டோ-கோர் 1.6ஜிகாஹெர்ட்ஸ் செயலி கொண்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு நௌகட் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதங்களில் சாம்சங் நிறுவனம் ஜே7 கேலக்ஸி ப்ரோ மற்றும் ஜே7 கேலக்ஸி மேக்ஸ் என்ற மாடல்களை அறிமுகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து இப்போது கேலக்ஸி ஜே7 என்எக்ஸ்டி என்ற ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் வெளியிடுகிறது.
சாம்சங் நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தும் கேலக்ஸி ஜே7 என்எக்ஸ்டி விலைப் பொறுத்தவரை ரூ.11,400-க்கு விற்பனை செய்யப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

5.5-இன்ச் டிஸ்பிளே:
கேலக்ஸி ஜே7 என்எக்ஸ்டி பொறுத்தவரை 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல்இவற்றில் இடம்பெற்றுள்ளது.

2ஜிபி ரேம்:
இக்கருவி 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் 256ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆண்ட்ராய்டு நௌகட்:
கேலக்ஸி ஜே7 என்எக்ஸ்டி பொதுவாக ஆக்டோ-கோர் 1.6 ஜிகாஹெர்ட்ஸ் செயலி கொண்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு நௌகட் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியர் கேமரா:
இக்கருவியின் பின்புற ரியர் கேமரா 13மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது, அதன்பின் முன்புற கேமரா 5மெகாபிக்சல் தீர்மானம் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃப்ளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

இணைப்பு ஆதரவுகள்:
வைஃபை, யுஎஸ்பி, ப்ளூடூத் 4.2, என்எப்சி, 4ஜி எல்டி, போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக்கூறப்படுகிறது.

பேட்டரி:
கேலக்ஸி ஜே7 என்எக்ஸ்டி ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சாரஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications