நம்பமுடியாத விலை குறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் கேலக்ஸி ஜே 7 டியோ.!
சாம்சங் கேலக்ஸி ஜே7 டியோ ஸ்மார்ட்போன் விலை மீண்டும் குறைத்தது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சாம்சங் கேலக்ஸி J7 டூயோ ரூ.16,990 ற்கு விற்பனை ஆரம்பிக்கப்பட்டது.
சாம்சங் கேலக்ஸி ஜே7 டியோ ஸ்மார்ட்போன் விலை மீண்டும் குறைத்தது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சாம்சங் கேலக்ஸி J7 டூயோ ரூ.16,990 ற்கு விற்பனை ஆரம்பிக்கப்பட்டது. தற்பொழுது இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ.12,990 ஆகா குறைக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஜே7 டியோ ஸ்மார்ட்போன் மூன்றாவது மறையாக விலை குறைக்கப்பட்டுள்ளது. முதலில் ரூ.1,000 குறைக்கப்பட்டு,இந்த ஸ்மார்ட்போன் இன் விலை ரூ.15,990 ஆகக் குறைந்தது. அதன்பின் சில நாட்களுக்கு முன்பு மீண்டும் ரூ.2,000 விலை குரைப்புடன் ரூ.13,990 விலைக்கு எட்டியது. இப்போது சாம்சங் கேலக்ஸி ஜே7 டியோ மீண்டும் விலை குறைந்து ரூ.12,990 க்கு விற்பனைக்குக் கிடைக்கும் என்று சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஜே 7 டியோ ஸ்மார்ட்போன் 5.5 இன்ச் சூப்பர் அமோல்ட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்புடன் வருகிறது, இத்துடன் 256 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக விரிவாக்கச் சேமிப்பையும் வழங்குகிறது. இரட்டை சிம் சேவையுடன், 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் எஸ்சினோஸ் 7 செயலி மூலம் இயக்கப்படுகிறது. அண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தில் இயங்குகிறது. 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் ஒரு 5 மெகாபிக்சல் இரண்டாம் சென்சார் இரட்டைப் பின்புற கேமராவுடன் 8 மெகாபிக்சல் முன் கேமரா மற்றும் ஃப்ளாஷ் சேவையுடன் வருகிறது. சாம்சங் கேலக்ஸி ஜே 7 டியோ 3000எம்ஏஎச் பேட்டரியுடன் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications