நம்பமுடியாத விலைகுறைப்புடன் விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்.!
அக்ஸலரோமீட்டர், பிங்கர் பிரிண்ட் (ஹோம் பட்டனில்) மற்றும் பராக்ஸிமிட்டி ஆகிய சென்சார்களை கொண்டுள்ளது. ஒரு 3000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.
மும்பை சார்ந்த சில்லறை விற்பனையாளரான மகேஷ் டெலிகாம் நிறுவனம் தற்சமயம் சாம்சங் கேலக்ஸி ஜே7 டியோ என்ற ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பை அறிவித்துள்ளது, மேலும் இந்த விலைகுறைப்பு சலுகை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி சாம்சங் கேலக்ஸி ஜே7 டியோ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.15,990-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.2000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.13,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

வண்ண மாதிரிகள் & ஓஎஸ்
கருப்பு மற்றும் தங்க நிற வகைகளில் கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி ஜே7 டியோவின் அம்சங்களை பொறுத்தவரை, டூயல் சிம் (மைக்ரோ) ஆதரவு கொண்டுள்ளது மற்றும் முன்னர் குறிபிட்டுள்ளபடி, ஆண்ட்ராய்டு ஓரியோ கொண்டு இயங்குகிறது.

டிஸ்ப்ளே & ரேம்
ஒரு 5.5 இன்ச் எச்டி (720x1280 பிக்சல்கள்) சூப்பர் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளார் இந்த ஸ்மார்ட்போன் ஆனது Exynos 7 தொடர் உடனான ஆக்டா- கோர் செயலி மற்றும் 4ஜிபி ரேம் உடன் இணைந்துள்ளது.

ரியர் கேமரா
கேமரா துறையை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி ஜே7 டியோ ஆனது, எப் / 1.9 துளை, பிளாஷ் மற்றும் ஆட்டோ-போகஸ் போன்ற அம்சங்களை கொண்ட 13 மெகாபிக்சல் சென்சார் மற்றும் ஒரு 5 மெகாபிக்சல் சென்சார் என்கிற டூயல் கேமரா அமைப்பை கொண்டுள்ளது.

செல்பீ கேமரா
முன்பக்கத்தை பொறுத்தவரை, செல்பீக்கள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான, எப் / 1.9 துளை மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்ட ஒரு 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. இதன் பிரதான கேமராவானது, வினாடிக்கு 30 பிரேம்கள் என்கிற விகிதத்திலான முழு எச்டி வீடியோ (1080x1920 பிக்ஸல்கள்) பதிவை நிகழ்த்தும் திறனை கொண்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. உடன் பேஸ் அன்லாக், செல்பீ போகஸ் மற்றும் பியூட்டி மோட் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது.

உள்ளடக்க சேமிப்பு & இணைப்பு ஆதரவுகள்
மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 32 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பை கொண்டுள்ள, கேலக்ஸி ஜே7 டியோ ஆனது 4G VoLTE, 802.11 a / b / g / n / ac (டூபாய்ல பேண்ட் 2.4GHz மற்றும் 5GHz), ப்ளூடூத் வி4.2, ஜிபிஎஸ் மற்றும் குளோனாஸ் ஆகிய இணைப்பு ஆதரவுகளையும் கொண்டுள்ளது.

சென்சார் & எடை
அக்ஸலரோமீட்டர், பிங்கர் பிரிண்ட் (ஹோம் பட்டனில்) மற்றும் பராக்ஸிமிட்டி ஆகிய சென்சார்களை கொண்டுள்ளது. ஒரு 3000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. அளவீட்டில், கேலக்ஸி ஜே7 டியோ ஆனது 153.5x77.2x8.2 மிமீ மற்றும் 174 கிராம் எடையும் கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications