பட்ஜெட் விலையில் டூயல் கேமரா+ பிக்ஸ்பை சப்போர்ட் உடன் சாம்சங் கேலக்ஸி ஜே7.!

இப்போது வெளியாகியுள்ள ஒரு உத்தியோகபூர்வ யூஸர் மேனுவல் (கையேடு) அதை உறுதிப்படுத்தியுள்ளது.

|

முன்னர் வெளியான தகவல்களின்படி, சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜே7 (2018) ஆனது கேலக்ஸி ஜே7 டூயோ என்ற பெயரின்கீழ் வெளியாகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது வெளியாகியுள்ள ஒரு உத்தியோகபூர்வ யூஸர் மேனுவல் (கையேடு) அதை உறுதிப்படுத்தியுள்ளது.

பட்ஜெட் விலையில் டூயல் கேமரா+ பிக்ஸ்பை உடன் சாம்சங் கேலக்ஸி ஜே7.!

மாடல் எண் SM-J720F என்கிற பெயரின்கீழ் காணப்பட்டுள்ள சாம்சங் கேலக்ஸி ஜே7 டியோ ஸ்மார்ட்போனின் பெயர் மட்டுமின்றி, அதன் சில அம்சங்களும் கசிந்துள்ளது. இந்த யூஸர் மேனுவல், சாம்சங் இந்தியா இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதால், இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு மிக விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் விலையில் டூயல் கேமரா+ பிக்ஸ்பை உடன் சாம்சங் கேலக்ஸி ஜே7.!

சாம்மொபைல் வழியாக வெளியான இந்த மேனுவலில், சாம்சங் கேலக்ஸி ஜே7 டியோ ஒரு டூயல் கேமரா அமைப்பை வெளிப்படுத்துகிறது. உடன் சாம்சங் நிறுவனத்தின் வாய்ஸ் அசிஸ்டென்ட் ஆன பிக்ஸ்பை ஆதரவையும் காட்டுகிறது. இது உண்மையானால் Bixby கொண்டு வெளியாகும் முதல் மிட்ரேன்ஜ் சாம்சங் ஸ்மார்ட்போன் என்கிற பெயரை கேலக்ஸி ஜே7 டியோ பெறும். ஸ்மார்ட்போனின் உடலில் எந்தவிதமான Bixby பட்டனும் இல்லை என்பதால், இந்த ஸ்மார்ட்போன் பிக்ஸ்பை ஹோம் மற்றும் பிக்ஸ்பைரீமைண்டர் ஆகியவைகளை மட்டுமே வழங்கும் என்பது போல் தெரிகிறது.

யூஸர் மேனுவலின் படி, கேலக்ஸி ஜே7 டியோ ஆனது ஒரு நீக்கக்கூடிய பேட்டரியை கொண்டுள்ளது, இதற்கு முன்னாள் வெளியான ஜே-தொடர் ஸ்மார்ட்போன்களில் நீக்க முடியாத பேட்டரிகள் இடம்பெற்றிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் விலையில் டூயல் கேமரா+ பிக்ஸ்பை உடன் சாம்சங் கேலக்ஸி ஜே7.!

இதுவரை வெளியான கேலக்ஸி ஜே7 டியோ அம்சங்களை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் ஒரு 5.5 இன்ச் 720பி டிஸ்பிளே, நிறுவனத்தின் எக்ஸிநோஸ் 7885 சிப்செட், 3ஜிஇ அல்லது 4ஜிபி ரேம், லைவ் ஃபோகஸ் பொக்கே விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு 13 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் என்கிற டூயல் கேமரா அமைப்பு, ப்ளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் முன்பக்க கேமரா, இரட்டை சிம் செயல்பாடு மற்றும் கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 8.0 Oஓரியோ ஆகிய அம்சங்களை கொண்டிருக்கும்.

முன்னதாக சாம்சங் கேலக்ஸி ஜே7 (2018), தரச்சான்றிதழ் தளமான கீக்பெஞ்ச் பெஞ்ச்மார்க் வலைத்தளத்தில் காணப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அந்த பட்டியலின் படி, சாம்சங் கேலக்ஸி ஜே7 (2018) ஆனது, 1199 என்கிற சிங்கிள்-கோர் டெஸ்ட் புள்ளிகளும், 3803 என்கிற மல்டி-கோர் டெஸ்ட் புள்ளிகளையும் பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy J7 Duo to come with dual rear cameras and Bixby Home support. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X