13எம்பி ரியர் கேமராவுடன் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி ஜே7 கோர்.!
சாம்சங் கேலக்ஸி ஜே7 கோர் பொறுத்தவரை 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
சாம்சங் நிறுவனம் சில நாட்களுக்கு முன்னால் சாம்சங் கேலக்ஸி ஜே2(2017) என்ற மாடலை அறிமுகப்படுத்தியது, அதை தொடர்ந்து இப்போது புதிய சாம்சங் கேலக்ஸி ஜே7 கோர் என்ற மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது சாம்சங் நிறுவனம்.
இந்த சாம்சங் கேலக்ஸி ஜே7 கோர் ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்வரை ரூ.12,600-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

5.5-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 5.5-இன்ச் சூப்பர் அமோல்ட் எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (720-1280)பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றள்ளது.

ஆக்டோ-கோர்:
சாம்சங் கேலக்ஸி ஜே7 கோர் பொறுத்தவரை 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

2ஜிபி ரேம்
இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

13எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை , ப்ளூடூத், 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற
இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:
சாம்சங் கேலக்ஸி ஜே7 கோர் ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications