டூயல் கேம் உடன் மீண்டும் சிக்கிய சாம்சங் கேலக்ஸி ஜே7 (2017).!

சாதனத்தின் முன்பக்கம் ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளேவை காணமுடிகிறது. இதுவொரு வரவேற்க்கத்தக்க நடவடிக்கையாக இருக்கும்.

|

சாம்சங் கேலக்ஸி ஜே7 (2017) கடந்த மாதம் கேலக்ஸி ஜே3 மற்றும் கேலக்ஸி ஜே5 (2017) உடன் இணைந்து தொடங்கப்பட்டது. தற்போது, கேலக்ஸி ஜே7 (2017) சீன பதிப்பில் இரட்டை கேமரா அமைப்பு சேர்க்க திட்டமிட்டுள்ளது போல் தெரிகிறது. அதனை நிரூபிக்கும் வண்ணம் சில புதிய படங்கள் ஆன்லைனில் வெளியான வானம் உள்ளன. அந்த படங்கள், வரவிருக்கும் சாதனத்தில் இரட்டை பின்புற கேமரா அம்சம் இடம்பெறலாம் என்பதை மேலும் பலப்படுத்துகிறது.

டூயல் கேம் உடன் மீண்டும் சிக்கிய சாம்சங் கேலக்ஸி ஜே7 (2017).!

கசிந்த புகைப்படங்களை ஸ்லாஷ் லீக்ஸ் வெளியிட்டுள்ளது. மேலும், இந்த படங்கள் சாதனத்தின் முன் மற்றும் பின்புற பகுதிகளை வெளிப்படுத்துகிறது. படத்தில் ஒரு செங்குத்தாக-சீரமைக்கப்பட்ட இரட்டை-கேமரா அமைப்பை தெளிவாக காணலாம். மேலும் ஸ்மார்ட்போன் ஒரு உலோக யூனிபாடி தோற்றமளிக்கிறது, ஆன்டெனா கோடுகள் சாதனத்தின் மேல் மற்றும் கீழ் முழுவதும் இயங்குகிறது மற்றும் சாதனத்தின் முன்பக்கம் ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளேவை காணமுடிகிறது. இதுவொரு வரவேற்க்கத்தக்க நடவடிக்கையாக இருக்கும்.

மெனு மற்றும் பேக் பொத்தான்களுக்கு நடுவே ஹோம் பொத்தானில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு கைரேகை சென்சார் உள்ளது. சாதனத்தின் மேல் ஒரு இயர்பீஸ் (earpiece) மற்றும் எல்இடி ப்ளாஷ் இணைந்து ஒரு முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது. வலதுபுறத்தில் உள்ள வால்யூம் கட்டுப்பாடுகள், வலதுபுறத்தில் பவர் பொத்தான் உள்ளது. சுவாரஸ்யமாக, இந்த ஸ்மார்ட்போன் ஒரு இரட்டை கேமரா அமைப்பு அம்சம் கொண்ட சாம்சங் கருவியாக தன்னை வெளிப்படுத்துகிறது.

சாம்சங் கேலக்ஸி ஜே7 (2017) ஸ்மார்ட்போனின் நிலையான பதிப்பானது ஒரு உலோக பாடி வடிவமைப்புடன் கூடிய ஒரு பெரிய 5.5 அங்குல முழு எச்டி (1280x1920 பிக்ஸல்) சூப்பர் அமோ எல்இடி டிஸ்பிளே கொண்டு வருகிறது.மேலும் அது 3 ஜிபி ரேம் ஜோடியாக மாலி டி830 ஜிபியூ (1.6ஜிகாஹெர்ட்ஸ்) ஆக்டா கோர் எக்ஸிநோஸ் 7870 செயலி மூலம் இயக்கப்படுகிறது. 16 ஜிபி உள் நினைவகத்துடன் வருகிறது மற்றும் இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடியது. ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்கும் இக்கருவி 3,600எம்ஏஎச் பேட்டரி சக்தியூட்டப்படுகின்றது.

கேமராவை பொறுத்தமட்டில், முன் மற்றும் பின்பக்கம் 13 மெகாபிக்சல் கேமராக்கள் கொண்டுள்ளது. இக்கருவ இரட்டை சிம் ஸ்லாட், 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ் போன்ற இணைப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy J7 (2017) leaked once again with dual-camera setup. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X