Home
Mobile

ஒன்பிளஸ் ஓரம்போ: வருகிறது அசத்தலான கேலக்ஸி ஜே6.!

கேலக்ஸி ஜே6 ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7870 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது.

சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, அதன்படி வரும் மே 21-ம் தேதி அன்று அசத்தலான கேலக்ஸி ஜே6 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யப்படும் என சாம்சங் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இப்போது வெளிவந்துள்ள ஒன்பிளஸ் 6 சாதனத்திற்கு போட்டியாக இந்த ஸ்மார்ட்போன் வெளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்சமயம் சாம்சங் கேலக்ஸி ஜே6 ஸ்மார்ட்போனின் டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் உலகம் முழுவதும் மிகப் பெரிய வெற்றியைப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

திரைவிகிதம்:

திரைவிகிதம்:

சாம்சங் கேலக்ஸி ஜே6 பொதுவாக 5.6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 720x1480 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

எக்ஸிநோஸ்:

எக்ஸிநோஸ்:

கேலக்ஸி ஜே6 ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7870 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, குறிப்பாக ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போனின் சேமிப்பு பொருத்தவரை 2ஜிபி/3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக ஆப் மற்றும் வீடியோ கால் வசதிகளுக்கு மிகவும் அருமையாக இருக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

 3000எம்ஏஎச்:

3000எம்ஏஎச்:

சாம்சங் கேலக்ஸி ஜே6 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy J6 with Infinity Display is coming to India on May 21; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X