அதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி ஜே6.!
இந்த கேலக்ஸி ஜே6 ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமராவும் இடம்பெற்றுள்ளது, குறிப்பாக எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.
சாம்சங் நிறுவனம் விரைவில் பின்புறம் 5கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யும் என்று தெரிவித்தது, இந்நிலையில் சாம்சங் கேலக்ஸி ஜே6 என்ற ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளது அந்நிறுவனம்.
அதன்படி கேலக்ஸி ஜே6 (3ஜிபி)ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.13,490-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.12,490-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி ஜே6 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7870 சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
இக்கருவி 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

இந்த கேலக்ஸி ஜே6 ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமராவும் இடம்பெற்றுள்ளது, குறிப்பாக எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 3000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக வைஃபை, யுஎஸ்பி,ப்ளூடூத் 4.2, என்எப்சி, 4ஜி வோல்ட் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5கேமராக்கள் கொண்ட நோக்கியா 9 ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் அதிக
எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications