இந்தியா: பட்ஜெட் விலையில் அசத்தலான கேலக்ஸி ஜே6 பிளஸ் அறிமுகம்.!
இந்த கேலக்ஸி ஜே6 பிளஸ் ஸ்மார்ட்போனில் 13எம்பி + 5எம்பி டுயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் தொடர்ந்து இந்திய சந்தையில் பல்வேறு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி தற்சமயம் கேலக்ஸி ஜே6 பிளஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கேலக்ஸி ஜே6 பிளஸ் ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் அண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

சாம்சங் :
சாம்சங் கேலக்ஸி ஜே6 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.6-இன்ச் அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080
பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ஆண்ட்ராய்டு ஓரியோ:
கேலக்ஸி ஜே6 பிளஸ் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 8.0 ஓரியோ
இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஜே6 பிளஸ் ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் வீடியோ கேம் மற்றும் ஆப் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன்
வெளிவந்துள்ளது.

கேமரா:
இந்த கேலக்ஸி ஜே6 பிளஸ் ஸ்மார்ட்போனில் 13எம்பி + 5எம்பி டுயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய
செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

விலை :
கேலக்ஸி ஜே6 பிளஸ் ஸ்மார்ட்போனில் 4350எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.15,990-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications