இன்பினிட்டி டிஸ்பிளேவுடன் அசத்த வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.! விலை எவ்வளவு தெரியுமா?
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் தற்போது முன்னணி விற்பனையில் இருக்கின்றது. மேலும் இந்த நிறுவனத்தின் போன்களுக்கு சந்தையில் தனி மவுசு உள்ளது. தற்போது மாறிவரும் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்பவும் தனி ஸ்டைலி
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் தற்போது முன்னணி விற்பனையில் இருக்கின்றது. மேலும் இந்த நிறுவனத்தின் போன்களுக்கு சந்தையில் தனி மவுசு உள்ளது.
தற்போது மாறிவரும் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்பவும் தனி ஸ்டைலில் சாம்சங் நிறுவனம் பல்வேறு ஸ்மார்ட் போன்களை சந்தைப்படுத்தி வருகின்றது.

இந்நிலையில் சாம்சங் நிறுவனம் தற்போது இன்பினிட்டி டிஸ்பிளே கொண்ட இரண்டு ஸ்மார்ட் போன்களுடன் சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கின்றது.
இதில், சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி மாடல்களில் ஜே6 பிளஸ் மற்றும் ஜெ 4 பிளஸ் புதிதாக களமிறங்குகின்றன.

ஜே6 பிளஸ்6, ஜே4 பிளஸ்:
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜே 6 மற்றும் கேலக்ஸி ஜே4 ஸ்மார்ட் போன்களில் இன்பினிட்ட டிஸ்பிளே இரண்டு ஸ்மார்ட்போன்களும் 6.0 இன்ச் ஹெச்டி பிளஸ் இன்பினிட்டி டிஸ்ப்ளே, குவாட் கோர் பிராசர் வழங்கப்பட்டுள்ளது.

8.1 ஓரியோ இயங்குளதம்:
ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்துடன் இரண்டு ஸ்மார்ட் போன் மாடல்களும் இருக்கின்றன. மேலும் 3300 எம்ஏஹெச் பேட்டரி இருக்கின்றது.
ஜே6 பிளஸ் மாடலின் வலதுபுறம் கைரேகை சென்சார் டூயல் பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

பிக்சல்:
6.0 இன்ச் 1480x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் இன்பினிட்டி 2.5 வளைந்த கிளாஸ் டிஸ்பிளே இருக்கின்றது. 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் ஸ்னாப்டிராகன் 425 பிராசஸர் அட்ரினோ 308 ஜிபியு வழங்கப்பட்டுள்ளது.

ரேம்:
3 ஜிபி ரேம் 32 ஜிபி மெமரி, 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மெரரியை கூடுதலாக நீடித்துக் கொள்ளலாம். 13 எம்பி கேமரா, எல்இடி பிளாஷ் எப் 1.9, 5 எம்பி 2ம் நிலை கேமரா எப் 2.2, 8 எம்பி செல்பி கேமரா, எல்இடி பிளாஷ் எப் 1.9, பக்கவாட்டில் கைரேரக சென்சார், 4 ஜி வோல்ட்.

கிடைக்கும் நிறங்கள்:
சாம்சங் கேலக்ஸி ஜெ6 பிளஸ் கிரே, பிளாக் மற்றும் ரெட் உள்ளிட்ட நிறங்களிலும் கேலக்ஸி ஜெ4 பிளஸ் மாட் பிளாக், கோல்டு மற்றும் பின்க் போன்ற நிறங்களில் கிடைக்கின்றது. இவற்றின் விலை விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றது.


Click it and Unblock the Notifications