Home
Mobile

இன்பினிட்டி டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஜே6.!

இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash S

தற்சமயம் புதிய சாம்சங் கேலக்ஸி ஜே6 ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது, அதன்படி கேலக்ஸி ஜே6 ஸ்மார்ட்போன் இன்பினிட்டி டிஸ்பிளேவுடன் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்க்ப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவருவதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்பினிட்டி டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஜே6.!

மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகயை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

கேலக்ஸி ஜே6 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2160 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். மேலும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இன்பினிட்டி டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஜே6.!

சாம்சங் கேலக்ஸி ஜே6 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7870 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த கேலக்ஸி ஜே6 ஸ்மார்ட்போன்.

இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இந்த சாம்சங் கேலக்ஸி ஜே6 ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக வீடியோ கால் அழைப்பு மற்றும் ஆப் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

இன்பினிட்டி டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஜே6.!

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

How to check PF Balance in online (TAMIL)

சாம்சங் கேலக்ஸி ஜே6 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy J6 official renders leaks, confirms Infinity Display design ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X